பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!!

Photo of author

By Sakthi

பாஜக கட்சியை குறித்து பேசிய பங்கஜா முண்டே!மகாராஷ்டிரா  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி பங்கஜா முண்டேவின் கருத்து!

பாஜக கட்சியின் முன்னாள் அமைச்சரும் பாஜக கட்சியின் தேசிய செயலாளருமான பங்கஜா முண்டே அவர்கள் பாஜக கட்சி குறித்து பேசியது மகாராஷ்டிரா அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த பாஜக கட்சியின் மூத்த தலைவர் கோபிநாத் முண்டே அவர்களின் மகள் தான் பங்கஜா முண்டே ஆவார். இவர் 2019ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பிறகு அவருடைய வேலையை மட்டும் பார்த்து வருகிறார். அரசியலில் கருத்துக்கள் தெரிவிப்பதையும் தவிர்த்து வருகிறார்.

2014-2019ம் ஆண்டுகளில் பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக இருந்த பொழுது பங்கஜா முண்டே அவர்கள் கேபினட் அமைச்சராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக பாஜக கட்சியால் பங்கஜா.முண்டே அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கஜா முண்டே அவர்கள் பேசியது அரசியல் அரங்கில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கஜா முண்டே அவர்கள் “பாஜக கட்சி மிகப் பெரிய கட்சி. அது எனக்கு சொந்தமானது அல்ல.” என்றும் கூறினார். மகாதேவ் ஜங்கரின் ஆர்.எஸ்.பி கட்சியை குறிப்பிட்டு பேசிய பங்கஜா முண்டே அவர்கள் “நான் பாஜக கட்சியை சேர்ந்தவள். என் தந்தையுடன் எதாவதா பிரச்சனை என்றால் நான் என் சகோதரர் வீட்டுக்கு செல்வேன்” என்றார்.

கோபிநாத் முண்டே அவர்களுடன் நெருங்கிய நட்புறவில்  இருந்த மகாதேவ் சங்கர் அவர்கள் “வேறு யாரிடமோ ரிமோட் கண்ட்ரோல் இருக்கக்கூடிய என் சகோதரியின் கட்சியால்  நமது சமூகத்திற்கு பயன் கிடைக்காது” என்று கூறினார்.