ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

0
303
#image_title

ஒடிசா மாநில இரயில் விபத்து! இரங்கல் தெரிவித்த நடிகர் சூரி!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் மாவட்டத்தில் ஏற்பட்ட இரயில் விபத்துக்கு நடிகர் சூரி அவர்கள் இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

நேற்று அதாவது ஜூன் 2ம் தேதி ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் மூன்று இரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்த நிலையில் 800க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சூரி அவர்கள் இந்த இரயில் விபத்துக்கு இரங்கல் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவையே அதிர்ச்சிக்கு ஆழ்த்திய இந்த இரயில் விபத்து பற்றி நடிகர் சூரி அவர்கள் “நெஞ்சே பதைப்பதைக்கிறது… என்ன கொடுமை இது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் உடனே குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

Previous articleஒரு கண் பார்வையை இழந்த பிரபல எழுத்தாளர்! தனக்கு நடந்த கத்தி குத்து பத்தி எழுதவுள்ளதாக அறிவிப்பு!!
Next articleநடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம்! கை திருட்டில் ஈடுபட்டதாக புகார்!