இனி விடுமுறை இல்லை! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

0
188
#image_title

இனி விடுமுறை இல்லை.. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கி உள்ளது. 1 முதல் 5ம் வகுப்பிற்கு ஜூன் 14ம் தேதி தொடங்க உள்ளது.

ஜூன் 1 திறக்க பட வேண்டிய பள்ளிகள் வெயிலின் காரணமாக 14 நாட்கள் தள்ளி வைக்கப்பட்டது. முதலில் ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்த நிலையில் வெயில் குறையாததன் காரணமாக ஜூன் 12ம் தேதிக்கு மாற்றப்பட்டது.

ஒரு கல்வி ஆண்டில் 210 நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக கல்வித்துறை அமைச்சர் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பள்ளிகள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் மாணவர்களின் படிப்பிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் அவர்களுக்கு பாடச்சுமை ஏற்படாத வகையிலும், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் பாடங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

மழைக்காலங்களில் மழையை பொறுத்து விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் மாணவர்களின் நலனை பொறுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரம் பற்றாக்குறை ஏற்படுவதை தடுப்பதற்காகவும் இந்த முடிவு எடுத்துள்ளது என்றும் கூறி உள்ளார்.

இதனால் ஒரு நாள் விடுமுறை “கட்” சனிக்கிழமையும் சேர்த்து 6 நாட்கள் இனி பள்ளிகள் செயல்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு விடுத்துள்ளார்.

 

Previous articleகட்டணம் உயர்வு!! மெட்ரோ அறிவித்த ஷாக் நியூஸ்!!
Next articleஆவின் நிறுவனத்தின் தயாரிப்புகள் நிறுத்தப்படுமா? இணையத்தில் வைரலாக பரவி வரும்  தகவல் !!