12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப்!! அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்!!
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ், தமிழ்நாட்டில் உள்ள 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்களை கூறினார்.
மாணவர்கள் அனைவரும் இந்த ஆண்டியில் சிறப்பாக படித்து பள்ளிக்கும் ஆசிரியருக்கும் பெருமை சேர்க்கவேண்டும் என மாணவர்களை வாழ்த்தினார். சில ஆண்டுகளாக லேப்டாப் வழங்கப்படவில்லை என்ற செய்தி இணையத்தில் வலம் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செய்தியாளர் ஒருவர் அரசு ஏற்க்கனவே வழங்கப்பட்ட லேப்டாப் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர், தமிழ்நாட்டில் உள்ள நிதி நெருக்கடி சீரான பின்பு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் 12 ஆம் வகுப்பு இறுதியில் லேப்டாப் வழங்க வேண்டும் என்பதற்கான முயற்சியை அரசு செய்து வருகிறது.
அதற்கு பிறகு 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்குக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது தொடர்பான முடிவு மாநில கல்வி கொள்கை முலம் ஆய்வு செய்துதான் கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.