இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

Photo of author

By Parthipan K

இலங்கை வீரர்களோடு கைகுலுக்க மறுக்கும் இங்கிலாந்து வீரர்கள்: ஏன் தெரியுமா ?

இலங்கையில் நடக்க இருக்கும் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் கொரோனா வைரஸ் பீதி காரணமாக கைகுலுக்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று இங்கிலாந்து அணி 3 வடிவிலான தொடர்களிலும் விளையாடியது. சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றாலும் அத்தொடரில் இங்கிலாந்து அணி வீரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியது. தொடரில் பல வீரர்கள் காய்ச்சல் மற்றும் உணவுக்குழல் பாதிப்பு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டனர்.

அதையடுத்து இப்போது இங்கிலாந்து இலங்கை அணிக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. 19 ஆம் தேதி தொடங்க இருக்கும் முதல் போட்டியின் போது நோய்த் தொற்று காரணமாக இலங்கை வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கொரோனா வைரஸ் பீதி மக்களை அச்சுறுத்தி வரும் தொடுதல் மூலமாக அந்நோய் பரவும் என சொல்லப்படுகிறது. இலங்கையிலும் இப்போது அதன் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இலங்கை வீரர்களை தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதைஇது சம்மந்தமாக ஜோ ரூட் அளித்த நேர்காணலில் ‘தென்னாப்பிரிக்க தொடரில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் தொட்டுக் கொள்ள் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம். ஆனால் அதற்குப் பதிலாக கையை மடக்கி, லேசாக முட்டிக் கொள்ள முடிவு செய்து இருக்கிறோம். பாதுகாப்புக் காரணமாக சீரான இடைவெளியில் கை கழுவி. பாக்டீரியா, கிருமிகள் பரவுவதை தவிர்க்கும் வகையில் எங்களது மருத்துவ குழு இந்த அறிவுரை வழங்கியுள்ளது.’ எனக் கூறியுள்ளார்.