நம் உடல் உறுப்புகள் எந்தெந்த செயல்பாடுகளை கண்டு பயப்படும்!! இதனை முழுமையாக பாருங்கள்!!

0
1176
#image_title

நம் உடல் உறுப்புகள் எந்தெந்த செயல்பாடுகளை கண்டு பயப்படும்!! இதனை முழுமையாக பாருங்கள்!!

உடலில் உள்ள உறுப்புகள் நாம் செய்யக்கூடிய சிறு சிறு செயல்களை கண்டு பயப்படக் காரணம் என்ன? எந்தெந்த உறுப்புக்கள் எந்த மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? நாம் அப்படி செய்யக்கூடிய தவறுதலான செயல்கள் என்னென்ன என்பதனை முழுமையாக தெரிந்து கொள்ள இதை பாருங்கள்.

சிறுநீரகம்:

இந்த உறுப்பு எதற்கு பயன்படும் என்றால் நீண்ட நேரம் கண் விழிக்கும் பொழுது பயம் கொள்ளும். நம் உடலுக்கு தூக்கம் வந்த பின்னரும் தூக்கத்தை தள்ளி வைத்து மொபைல் பயன்படுத்தும் போதும், தொழில் சம்பந்தமாக அதிக நேரம் தூங்காமல் இருக்கும் போதும், இவ்வாறு தொடர்ந்து செய்கையில் சிறுநீரக செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். இவ்வாறு செய்யும் பொழுது நம் உடல் ஆரோக்கியம் மிகவும் குறைந்து போகும். ஆகையால் உடலுக்கு தேவையான உறக்கத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும்.

வயிறு:

குளிரூட்டப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது வயிறு மற்றும் வயிற்றை சுற்றியுள்ள உறுப்புகள், செரிமான உறுப்புகள் எல்லாமே அதனுடைய வேலைகளை செய்வதற்கு தாமதமாகும். இதனால் இந்த உறுப்புகள் பாதிப்படைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதிகமாக குளிரூட்டப்பட்ட பொருட்களை உண்ணும் பொழுது நம் மனதிற்கு நிறைவாக இருப்பது போல் தோன்றலாம்.ஆனால் அது வயிற்றுக்கு மிகவும் கெடுதலை உண்டாக்கும். ஆகையால் அதிகமாக குளிரூட்டப்பட்ட பொருட்களை தவிர்ப்பது நல்லது.

நுரையீரல்:

புகை பழக்கம் இருப்பவர்களுக்கு நுரையீரலில் அதிகம் பாதிப்பை உண்டாக்கும். ஆகையால் இந்த பழக்கத்தை கைவிடுவது நல்லது.

கல்லீரல்:

இந்த உறுப்பு அதிக கொழுப்பு சத்து உள்ள உணவுகளை உண்ணும் பொழுது பாதிப்பு உண்டாகும். மது அருந்தும் பொழுது இந்த உறுப்பு பாதிப்படையும்.

இதயம்:

அதிகமாக உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது இதற்கு பிரச்சனையை உண்டாக்கும். ஃபாஸ்ட் ஃபுட் உணவு அதிகமாக உட்கொள்ளும் பொழுது உடல் ஆரோக்கியத்தை முற்றிலும் குறைக்கும்.

கணையம்:

அதிகப்படியான நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும். இது எப்படி என்றால் உணவுக்கு பதிலாக அதிகப்படியாக நொறுக்கு தீனி சாப்பிடுவது.

குடல்:

கடல் சார்ந்த உணவுகளை தினமும் உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் முற்றிலும் குறைய ஆரம்பிக்கும்.

கண்:

இன்றுள்ள காலகட்டங்களில் போன் மற்றும் கம்ப்யூட்டரை பயன்படுத்த வேண்டிய அவசியம் அதிகம் உள்ளது. இதனை முடிந்தவரை தேவை இல்லாமல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. இதேபோன்று நம் கண்ணிற்கு தேவையான உறக்கத்தை கொடுப்பது நல்லது.

பித்தப்பை:

காலை உணவுகள் உண்ணாமல் இருக்கும் பொழுது இதற்கு பாதிப்பு உண்டாகும். மனிதனுக்கு காலை உணவு என்பது கட்டாயம் மிகவும் முக்கியமான ஒன்று. காலையில் எடுத்துக் கொள்ளும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வது அவசியம்.

Previous articleநவதானியத்தில் ஒரு தானியம் நமது உடல் எடையை குறைக்கும்!! நீங்கள் எவ்வளவு குண்டாக இருந்தாலும் கட்டாயம் எடை குறையும்!!
Next articleஇதை மட்டும் செய்யுங்கள் ஆயுசுக்கும் கல்லீரல் பிரச்சனை வராது!!