பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!!

பள்ளிகளில் இனி கட்டாயம் இது மூன்று வேளையும் உண்டு!! இன்று முதல் அமல்!!

கோடை வெப்பத்தால் தள்ளி போன பள்ளி திறப்பு தற்போது மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து வருகின்றனர். இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள தொடக்க பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனால் தொடக்க பள்ளி மாணவர்கள் இன்று முதல் நாள் பள்ளிக்கு சென்று உள்ளார்கள் . ஏற்கனவே ஆறாம் வகுப்பு முதல் பணிரெண்டாம்  வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  புதுச்சேரி அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. ஒவ்வொறு நாளும் மூன்றுமுறை வாட்டர் பெல் அடிக்கும்மாறு  உத்திரவிடப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை 10.30, 11.45 மற்றும் பிற்பகல்  2.30 இடைவேளை என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதிக வெயில் காரணமாக  தொடக்க பள்ளி மாணவர்களுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் முறையாக வழங்க வேண்டும் என  ஆணையிட்டுள்ளது . இது மட்டுமின்றி மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும்  ஆசிரியார்கள் செய்து தரவேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது .