கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

0
148
no-more-time-restriction-for-heavy-vehicles-the-action-order-put-by-the-police
no-more-time-restriction-for-heavy-vehicles-the-action-order-put-by-the-police

கனரக வாகனங்கள் செல்ல இனி நேர கட்டுப்பாடு!! காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் வருவதால் விபத்தடைந்து உயிரழப்புகள் ஏற்பட அபாயம் உண்டாகிறது .

நகரில் உள்ள சாலையில் கனரக வாகனங்கள், சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள்  காலை மற்றும் மாலை என்று இரண்டு வேலைகளிலும் அதிக அளவில் செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இந்த நெரிசலில் பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்வோர் , வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் என்று பலர் அவதிப்படுகின்றனர்.

மேலும் கனரக வாகனங்கள் வருவதால் விபத்துகள் ஏற்படுவது தொடர்கிறது.அதிவேகத்தில் இந்த கனரக வாகனங்கள் வருவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது .

இதனை தடுக்க திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் சீபாஸ் கல்யாண் கனரக வாகனங்கள் வர நேரக்கட்டுப்பாடு விதிக்க உத்தரவிட்டுள்ளார்.

போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவின் படி நகரத்துக்குள் கனரக வாகனங்கள் மற்றும் சவுடு மண் ஏற்றி வரும் வாகனங்கள் காலை 8 மணியில் இருந்து 10 மணி வரையிலும் , மாலை 4 மணியில் இருந்து இரவு 10  மணி வரையிலும் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரு செய்வதன் மூலம் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை கட்டுப்படுத்தலாம்.

மேலும் நகர சாலையில் வரும் கனரக வாகனங்கள் காலை 10 மணியில் இருந்து மாலை 3 மணி வரையிலும் ,இரவு 10  மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.

Previous articleநான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!
Next article+2 மாணவர்களுக்கு மீண்டும் வெளியான தேர்வு முடிவுகள்!! உடனே சரி பாருங்கள்!!