திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

0
223

திரௌபதி திரைப்படம் மராத்திய மொழியில் ரீமேக் ஆக உள்ளது : உற்சாகத்தில் படக்குழு

கடந்த 28 ஆம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் பெற்றோர்கள் மற்றும் பெண்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

திரௌபதி படம் ட்ரைலர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்தது. இதனால் படம் ரிலீஸ் ஆகுமா? சென்சாரில் தப்புமா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்தது.

அத்தனை சர்ச்சைகளையும் கடந்து சென்சார் போர்டின் U/A சான்றுடன் 330 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியானது. படம் ரிலீஸ் ஆகும் வரை பல சர்ச்சைகளை சந்தித்த திரௌபதி படம் அதன் பிறகு சாதனைகளாக படைத்தது வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு மராத்திய நடிகர் அங்குஷ் சௌதிரி இந்த படத்தை பார்த்து தனது பாராட்டுகளை சமூக வலைத்தளம் மூலமாக வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் திரௌபதி படத்தை மராத்திய மொழியில் ரீமேக் செய்ய உள்ளதாக திரையுலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருவேளை ரீமேக் செய்ய முடியாவிட்டால் இந்த படத்தை மராத்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. இந்த படம் மராத்தியில் எப்படி வெளியிடப்பட்டாலும் அதனை வரவேற்க தயாராக இருப்பதாக திரௌபதி படக்குழு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது.

Previous articleரஜினிக்கு கிடைத்த ஏமாற்றம்..! மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் புஸ்ஸ்ஸ்!! நடந்தது என்ன..?
Next articleஇதுதான் இன்றைய தமிழ் சினிமாவின் நிலை : தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு கடிதம்!