இதுதான் கடைசி தேதி மக்களே முந்துங்கள்!! இதை செய்யவில்லை என்றால் பான் கார்டு ரத்து!!
மத்திய அரசால் வெளியிடப்பட்டது ஒரு முக்கியமான அறிவிப்பு அது ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
மத்திய வருமான வரித்துறை சில வருடங்களாக ஆதார் மற்றும் பான் இணைப்பை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கொண்டே வருகிறது.
இவ்வாறு இணைப்பதன் மூலம் வங்கி சார்ந்த சேவை வருமான வரி கணக்கு போன்ற பண பரிமாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மத்திய அரசு கட்டாயமாக பான் மற்றும் ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தியுள்ளது.
மேலும் தனிநபர் ஒரு பான் கார்டு மட்டுமே வழங்கப்பட வேண்டும் இருப்பினும் அந்த நபர் ஆவணங்களை கொடுத்து பல ஆவணங்களை வாங்கி வருகின்றனர்.
இதனை தவிர்க்கும் விதமாகவே ஆதார் மற்றும் பான் இணைப்புகளை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசால் வலியுறுத்தப்பட்டது.
பல இதனை தீவிரமாக செய்து முடித்தாலும் சிலர் இதனை செய்யாமல் தாமதித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இருந்தாலும் மத்திய வருமான வரித்துறை பலமுறை கால அவகாசங்களை கொடுத்தும் மக்கள் இதனை செய்து முடிக்காததால் மீண்டும் கால அவகாசத்தை மத்திய அரசு கொடுத்துள்ளது.
இதில் பலர் இன்னும் அவகாசங்கள் வழங்கப்படுமோ என்று காத்திருக்கின்றனர் இதற்காக மத்திய அரசு தேதி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி மத்திய வருமான வரித்துறை ஆதார் மற்றும் பான் இணைப்புகளை இணைப்பதற்கான இணையதள அமைப்பு ஒன்றை கொடுத்துள்ளது.
நீங்கள் இதனை இரண்டு முறைகளில் இணைத்துக் கொள்ளலாம். ஒன்று 567678 அல்லது 56161 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்வதன் மூலமாக இணைத்துக் கொள்ளலாம்.
இல்லையென்றால் மத்திய அரசால் கொடுக்கப்பட்ட http://incometaxindiafiling.gov.in./ இந்த ஆதிக்கபூர்வமான இணையதளத்தின் மூலமாகவோ இணைத்துக் கொள்ளலாம் என்று குறிப்பிடத்தக்கது.
இதன்படி ஆதார் மற்றும் இணைப்பை இணைப்பதற்கான கடைசி நாளாக ஜூன் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்பொழுதும் இணைக்காத நபர்களுக்கு ரூ 10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்தது.
இதனை செய்து முடிக்காத பட்சத்தில் பயணியரின் பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனால் தற்போது வரையிலும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காத நபர்கள் கட்டாயம் ஜூன் 30-ஆம் தேதிக்குள் இணைத்து விட வேண்டும்.