இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

0
193
#image_title

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் இறக்கம் பொருத்து சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த விலை நிர்ணயமானது அமெரிக்க டாலரின் அடிப்படையில் காணப்படும்.

கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டரின் விலை மட்டும் ஏற்றம் இறக்கமாக இருக்கிறது.

அந்த வகையில் வணிகப் பயன்பாட்டாளர்கள் பெருமளவு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் மத்திய அரசு முன்பு வழங்கி வந்த சிலிண்டர் மானியமும் தற்பொழுது இல்லாததால் வீட்டு உபயோகிப்பாளர்கள் மேற்கொண்டு அவதி அடைகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டர் ஆனது ரூ 1180 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுவே வணிக சிலிண்டர் ஆனது ரூ.1937க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விளையாடுது மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் பங்கேற்ற சிலிண்டர் விலை குறைப்பு குறித்து அறிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தியா தற்பொழுது பொருளாதார நாடாக உயர்ந்து வருவதில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் சிலிண்டரின் விலை ஆனது குறையும் என தெரிவித்தார்.

அது மட்டும் இன்றி அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி தங்களின் வாக்குகளை தக்கவைத்துக் கொள்ள மோடி சிலிண்டர் விலையில் ஏதேனும் மாற்றத்தை கொண்டு வரலாம் என கூறுகின்றனர்.