தீராத முழங்கால் வலியை போக்க இந்த ஒரு கிளாஸ் போதும்!!
நம்மில் பலருக்கும் முழங்கால் வலி பிரச்சனை இருக்கும். இந்த முழங்கால் வலியை குணமாக்க அதிக மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்வோம். பல எண்ணெய்களை பயன்படுத்தி இருப்போம். இருந்தும் பயன் தந்திருக்காது. அந்த முழங்கால் வலியை குணமாக்க அருமையான மருந்தை எப்படி தயார் செய்து குடிப்பது என்று பார்க்கலாம்.
முழங்கால் வலி ஏற்படுவது எதனால் என்றால் நம் உடலில் ஏற்படும் வாத தோஷத்தால்தான் முழங்கால் வலி ஏற்படுகின்றது. இந்த வாத தோஷம் எதனால் ஏற்படுகிறது என்றால் நம் உடலில் ஜீரணம் சரியாக நடக்காமல் இருந்தால் வாத தோஷம் ஏற்படும். இது மட்டுமில்லாமல் ஜீரணம் சரியாக நடக்காமல் மலச்சிக்கல் ஏற்பட்டு வயிற்றில் கிருமிகள் தேங்குகின்றது. இந்த கிருமிகள் அனைத்தும் இரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் சிறுநீரகம் சரியாக செயல்படாமல் போகின்றது.
இதன் காரணமாக மூட்டுகளில் யூரிக் ஆசிட் தேங்கி மூட்டு வலிகள் ஏற்படுகின்றது. இதை சரிசெய்ய முதலில் ஜீரணம் சரியாக நம் உடலில் நடக்க வேண்டும். அதற்கு தேவையான மருந்தை எவ்வாறு தயார் செய்வது என்று பார்க்கலாம்.
இதை செய்ய தேவையான பொருள்கள்…
* ஓமம்
* பிரியாணி இலை
* வெல்லம்
இந்த மருந்தை தயார் செய்யும் முறை…
முதலில் அடுப்பை பற்ற வைத்து சிறிய பாத்திரம் வைத்துக் கொள்ளவும். அதில் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் ஓமம் எடுத்து இந்த தண்ணீரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் பிரியாணி இலைகளை சிறிது சிறிதாக நறுக்கி இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கொதிக்க வைக்க வேண்டும். எடுத்துள்ள ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஒரு கிளாஸ் தண்ணீராக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
கொதித்த பிறகு இந்த தண்ணீரை ஒரு டம்ளரில் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதில் நெல்லிக்காய் அளவு வெல்லத்தை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அல்லது இந்த வெல்லத்தை பொடி செய்தும் பயன்படுத்தலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெல்லத்தை பயன்படுத்தக் கூடாது.
இந்த மருந்தை வெறும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. இதனால் முழங்கால் வலி குணமாகும். எழுந்து நடக்க முடியாமல் இருப்பவர்கள் கூட இந்த மருந்தை குடித்து வந்தால் எழுந்து நடக்கத் தொடங்குவார்கள்.
இந்த மருந்தை இரவு தூங்கச் செல்லும் முன்பு குடிக்கலாம். இது போல ஒரு நாளுக்கு இரண்டு முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்டால் ஜீரண மண்டலம் சரியாக வாத தோஷம் குணமாகும். இதையடுத்து மூட்டு வலி, முழங்கால் வலி குணமடைகின்றது.
இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் பொழுது கெட்ட கொழுப்புகள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மது அருந்தக் கூடாது. இந்த மருந்துடன் தினமும் பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் காய்கறிகள், கீரை வகைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் தினமும் 6 முதல் 7 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாக குடிக்கும் பொழுது நம் உடலில் உள்ள விஷக் கிருமிகள், யூரிக் ஆசிட் அனைத்தும் வெளியேறும். இந்த மருந்தை ஒரு நாளுக்கு இரண்டு முறை இந்த பதிவில் கூறியது போல எடுத்துக் கொண்டால் மூட்டு வலி பிரச்சனை குணமாகும். மேலும் கீழ் வாதம் சரியாகும்.
ஓமத்தின் பயன்கள்…
ஓமம் நமக்கு ஏற்படும் வாதத்தை சரிசெய்யக் கூடிய ஆற்றல் உள்ளது. இந்த ஓமத்தை எடுத்துக் கொள்வதால் இதயம் தொடர்பான நோய்த் தொற்றுகளை சரி செய்யும். ஓமம் நமக்கு ஏற்படும் சரும பிரச்சனைகளையும் சரி செய்யும். இடுப்பு வலி, கீழ் வாதம், இடுப்பு வலி போன்ற பிரச்சனைகளுக்கு ஓமம் நல்லது. இந்த ஓமம் நமக்கு ஏற்படும் வாயுத்தொல்லை, அசிடிட்டி ஆகிய பிரச்சனைகளையும் சரி செய்கின்றது. அஜீரணக் கோளாரை சரி செய்து ஜீரண மண்டலத்தையும் பலப்படுத்துகின்றது.
பிரியாணி இலையின் பலன்கள்…
இந்த பிரியாணி இலை நம் உடலில் இருக்கும் விஷக் கிருமிகளை வெளியேற்ற உதவி செய்கின்றது. பிரியாணி இலையில் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. பிரியாணி இலையில் இருக்கும் போலிக் ஆசிட் நாம் சாப்பிட்ட உணவை ஜீரணம் செய்ய வைத்து ஜீரணம் தொடர்பா
ன பிரச்சனைகளை சரிசெய்கின்றது.