அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி! இனிமேல் இந்த 2 அமைச்சர்களுக்கு கூடுதல் இலாகாவா? வெளிவந்த பரபரப்பு தகவல்!
தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் அமலாக்கத்துறை சோதனையில் கைதாவது இதுவே முதல்முறை. இதனால் தி.மு.க.வுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
சட்ட விரோத வழக்கில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க கூறி கோரிக்கை எழுப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜா.க. மாநில தலைவர் அண்ணாமலை, தி.மு.க. வின் கருவூலமாக செந்தில் பாலாஜி மாறி விட்டார் என்றும், அவரை காண முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரும் வருகின்றனர் என்றும், எனவே இவர் பதவியை வேறு யாருக்காவது தர வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
இவர் பதவியில் நீடிக்க முடியாததால் உடனடியாக இவரை பதவியில் இருந்து விடுவிக்க ஆளுநருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனால் செந்தில் பாலாஜி இருந்து வந்த இலாகாக்களை அமைச்சர்கள் தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசுவாமிக்கும் ஒதுக்குவது குறித்து தமிழக அரசு கவர்னர் ரவிக்கு பரிந்துரை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அமைச்சர் முத்துசுவாமிக்கு கூதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கீடு செய்யவும், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக மின்சாரத்துறையும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இது சம்மந்தமான ஆவணங்கள் குறித்து கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்று கூறப்படுகிறது.