இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

0
168
#image_title

இந்த வருடம் பள்ளிகளில் இது கட்டாயம்!! அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பிற்கான வகுப்புகள் தொடங்கப்பட்டு புத்தகங்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. முதலில் ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என கூறினர். ஆனால் வெயிலின் தாக்கம் குறையாததால் ஜூன் 7ஆம் தேதி ஆக மாற்றம் செய்யப்பட்டது.

அச்சமயத்திலும் வெயிலின் தாக்கம் சிறிதளவு கூட குறையவில்லை. எனவே உயர்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி என்றும் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு ஜூன் 15ஆம் தேதி என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன்படி தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மேற்கொண்டு அனைத்து செயல்பாடுகளும் நடைபெற்ற வருகிறது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எந்தெந்த திட்டங்கள் தற்போது நடைமுறையில் உள்ளது அதனின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் சென்ற ஆண்டு விட இந்த ஆண்டு கட்டாயம் தேர்ச்சி விகிதத்தை அதிகருத்து காட்ட வேண்டும் என்று அன்பில் மகேஷ் உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்படி பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் என தொடங்கி பல சிறப்பு நடவடிக்கைகளை எடுக்க அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Previous articleநாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு தரும் மானியம்!! விண்ணப்பிப்பது எப்படி இதோ முழு விவரம்!!
Next article10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும் ரூ 20000 ஆயிரத்தில் உடனடி வேலை!!! எல்ஐசி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!