இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட கூடாதவை!! எதை சேர்த்து சாப்பிடலாம்!!
நாம் விரும்பி சாப்பிடக்கூடிய இறைச்சியான ஆட்டுக்கறி, கோழிக்கறி, மீன் எதுவாக இருந்தாலும் சரி இதனுடன் இணைத்து சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன, இறைச்சி சாப்பிட்டதுக்கு அப்புறம் என்னென்ன உணவுகள் எடுத்துக் கொண்டால் சிறந்தது என்பதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.
இறைச்சியுடன் நாம் சாப்பிடக்கூடிய கூடாத நிறைய உணவுகளை சேர்த்துக் கொள்ளும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. இறைச்சியுடன் மைதா சம்பந்தமான உணவுகளை உட்கொள்ளும் போது செரிமான பிரச்சனை உண்டாகி மலச்சிக்கல் ஏற்படும்.
இரண்டாவதாக இறைச்சியுடன் பயறு வகைகளை எடுத்துக் கொள்வது தவிர்க்க வேண்டும். முக்கியமாக முளைக்கட்டிய பயிர்களை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இறைச்சியிலும் புரோட்டின் அதிகமாக உள்ளது, அதேபோன்று பயிறு வகைகளையும் பொழுது அதிகமாக இருக்கும், இது ரெண்டும் ஒன்றாக சாப்பிடும் பொழுது உடலில் மதமதப்பு தன்மை, மூட்டு வலி வருவதற்கு வாய்ப்பு உள்ளது ஆகையால் இவை இரண்டையும் ஒன்று சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மூன்றாவதாக, தானியம் மற்றும் இறைச்சியை ஒன்று சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தானியங்களை உடலுக்கு தேவையான எனர்ஜிகள் அதிகம் உள்ளதால், இதுவே உடலுக்கு அதிகமான சத்துக்களை கொடுக்கும். இதனுடன் இன்னும் சத்துக்கள் இருந்தத இறைச்சிகளை சாப்பிடும் பொழுது நாம் நன்மை என்று நினைப்போம். இது நல்ல விஷயம்தானே என்று நினைப்போம், ஆனால் இது நல்லதல்ல இவ்வாறு செய்யும் பொழுது, உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தி அதிகமாகும். சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பு இதனால் ஏற்படும் என்பதால் தானியங்களுடன் இறைச்சியை சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டும்.
நான்காவதாக, இறைச்சியுடன் எந்த வகையான கீரைகளையும் சேர்த்து சாப்பிடுவது கூடாது. இவ்வாறு உண்ணும் பொழுது கல்லீரல் பாதிப்பு உண்டாகும்.
ஐந்தாவதாக, இறைச்சியுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது. தயிர் மட்டுமல்ல பால் சார்ந்த எந்த பொருட்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. அவ்வாறு சாப்பிட்டால் நமக்கு உருவாக்கக்கூடிய ரத்தம் நல்ல ரத்தமாக இருக்காது. இதேபோன்று, மீன் மற்றும் கோழி இறைச்சியுடன் கூட பால் சம்பந்தமாக பொருட்களை எடுத்துக் கொள்ளக் கூடாது.
ஆறாவதாக, இறைச்சியை கடுகு எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் உடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. இது பருவகால மாற்றங்களுக்கு ஏற்றபடி மாறக்கூடிய தன்மை உடையது. இதனால் உடலில் உஷ்ணம் அதிகமாவதற்கு வாய்ப்பு அதிகம். அவையல் இந்த இரண்டு எண்ணையும் இறைச்சியுடன் சேர்ப்பதை தவிர்க்கவும்.
ஏழாவதாக, இறைச்சி சாப்பிட்டவுடன், கூல்டிரிங்ஸ் உடனடியாக குடிக்கும் பழக்கம் நிறைய பேருக்கு உண்டு. இவ்வாறு செயலில் செரிமான பிரச்சனை உண்டாகி, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். இதனால் உடல் அசதியாகவே இருக்க கூடிய ஒரு நிலைமை ஏற்படும்.
எட்டாவதாக, இறைச்சியுடன் கிழங்கு வகைகளை சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால் நெஞ்செரிச்சல், அசதி, செரிமான கோளாறு, அடிக்கடி புளித்த ஏப்பம் வருவது போன்று பிரச்சனைகள் உடலில் ஏற்படும் அபாயம் உண்டாக்கலாம். நிறைய வாய்வுத் தொல்லை வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒன்பதாவதாக, இறைச்சி உடன் வேகவைத்த முள்ளங்கியை சேர்த்துக் கொள்ளும் பொழுது ரத்தம் நச்சுத்தன்மை அடையும், புரத ஊட்டச்சத்து அதிகரிக்கும் இதனால் உடல் பிரச்சினை ஏற்படும்.
பத்தாவதாக, இறைச்சியும் தேனும் சேர்த்து சாப்பிடக்கூடாது. நம் சாப்பிடக்கூடிய உணவை நச்சுத்தன்மையாக மாற்றக்கூடிய அதிகம் உள்ளது. இதனை ஆயுர்வேதத்தில் ஆமவிஷம் என்றும் சொல்வார்கள்.
இறைச்சியுடன் சேர்த்து உண்ணக்கூடிய உணவுகள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்:
எந்த வகையான இறைச்சியாக இருந்தால் நல்லெண்ணெய் பயன்படுத்தி சாப்பிடுவது நல்லது. எழுச்சி உண்டவுடன் பப்பாளி அல்லது பப்பாளி ஜூஸ் குடிப்பது நல்லது. இதற்கு உணவை மிருதுவாக்கும் தன்மை கொண்டது. எலுமிச்சை பழச்சாறு,பெருஞ்சீரகம் கலந்த தண்ணீர், பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி, சின்ன வெங்காயம் தோல் உரித்து விட்டு அப்படியே சாப்பிடலாம், இது எல்லாமே இறைச்சி சாப்பிட்ட பின்னர் சேர்த்துக் கொள்ளக்கூடிய உணவுகள்.