இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!
தலைநகர் புது டெல்லியிலுள்ள தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு அருங்காட்சியகம் அமைந்துள்ளது . ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு வசித்து வந்தார்.
அதற்கு அடுத்து, நேரு இறந்த பின் அந்த கட்டிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதில் நூலகமும் அருங்காட் சியகமும் நிறுவப்பட்டது. இந்த அருங்காட்சியத்தில் விடுதலை போராட்ட வீரர் நேருவின் வாழ்க்கை வரலாறு போன்ற நூல் வைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற நேரு அருங்காட்சியகம் நேரு பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேரு அருங்காட்சியகம் தற்போது பெயர் மாற்றப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது .
மேலும் நேரு அருங்காட்சியத்திற்கு தற்போது உள்ள பிரதமர் மோடியின் பெயர் வைப்பதாகவும்,இனி பிரதம மந்திரி அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் என கூறியுள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜெயராம் ரமேஷ், மோடியை விமர்சித்துள்ளார் . பிரதர் மோடி பழி வாங்குவதில் வள்ளவர் என்றும் நம் நாட்டின் பாரம்பரியத்தை அளிக்க எது வேண்டுமனாலும் செய்வார் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்த நேரு அருங்காட்சியகம் கடந்த 59 ஆண்டுகளாக சர்வதேச அளவில் புகழ்ப் பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.