யெஸ் வங்கி நிறுவனர் கைது

0
128

யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரை அமலாக்கத்துறையினர் இன்று கைது செய்துள்ளனர்…

வாராக்கடன்கள் அதிகரித்ததால் பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி கைப்பற்றியுள்ளது. திருப்பி செலுத்தும் திறன் இல்லை என்பதால் பிற வங்கிகள் கடன் அளிக்க மறுத்த நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது அந்த வங்கியின் நிலைக்கும் அந்த கடன்களே காரணம் என்று கூறப்படுகிறது. முறைகேடு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டி ஹெச் எஃப் எல் நிறுவனத்துக்கு யெஸ் வங்கி அளித்த கடன் வாராக்கடனாக மாறியுள்ளது. இது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில் ராணா கபூரை அமலாக்கத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்…..

Previous articleகொரோனா அச்சுறுத்தலுக்கு வேற லெவலில் விழிப்புணர்வு: அதிரடி செயலில் மத்திய அரசு!
Next articleசர்வதேச மகளிர் தினத்தில் புதிய மைல் கல்லை எட்டிய திரௌபதி திரைப்படம் : உற்சாகத்தில் படக்குழு