பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?

0
144
A boat catches fire in the middle of the sea in the Philippines
A boat catches fire in the middle of the sea in the Philippines
பிலிப்பைன்ஸில் நடுக்கடலில் தீ பற்றி எரிந்த படகு!! 120 பயணிகளின் நிலை என்ன?
பிலிப்பைன்ஸ் நாட்டில் 120 பயணிகளை ஏற்றிச் சென்ற பயணிகள் படகு நடுக்கடலில் திடீரென்று தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸில் சிக்யூஜொர் மாகாணம் உள்ளது. அங்கிருந்து பொஹல் மாகாணத்திற்கு எஸ்பெரன்ஷா ஸ்டார் என்ற பயணிகள் படகு பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.
இந்த படகில் 65 பயணிகள், 55 ஊழியர்கள் என மொத்தம் 120 பேர் சென்றனர். படகு நடுக்கடலில் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென்று தீ பிடித்ததால் படகு முழுவதும் புகை சூழ்ந்தது. இதையடுத்து தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிலர் கடலுக்குள் குதித்தனர்.
படகு தீப்பற்றியதை பற்றி மீட்புக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு  இரண்டு படகுகளில் தீயணைப்பு வீரர்களும் கடற்படையினரும் விரைந்து வந்தனர்.  பின்னர் படகில் பற்றி எரியும் தீயை அனைத்தனர். பின்னர் பயணிகளையும் ஊழியர்களையும் மீட்புக்குழு பத்திரமாக மீட்டது.
படகில் சென்ற பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 120 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று கடற்படை செய்தி தொடர்பாளர் ஜோய் குமத்தாய் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட அனைவரும் பொஹல் மாகாணத்தின் தக்பிலரான் நகரக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் படகில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் இது போன்ற படகு விபத்து அடிக்கடி அதிகமான நடக்கின்றது. படகுகளின் மோசமான பராமரிப்பு, அடிக்கடி புயல் வீசுவது, அளவுக்கு அதிகமாக பயணிகள் செல்வது போன்றவற்றால் படகு விபத்துக்கள் பிலிப்பைன்ஸ் நாட்டில் அடிக்கடி நடப்பதாக கூறப்படுகின்றது.
Previous articleஉணர்வுகளை புண்படுத்தும் வசனங்கள்!! ஆதிபுருஷ் படக்குழு எடுத்த திடீர் முடிவு!!
Next articleஉலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!