உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!

உலகக் கோப்பை தகுதிச் சுற்று போட்டி!! முதல் போட்டியில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி!!
உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நேற்று அதாவது ஜூன் 18ம் தேதி தொடங்கியது. இதில் முதல் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணியும், நேபாளம் அணியும் மோதியது.
டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நேப்பாள அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக குஷால் புர்டல் அரைசதம் அடித்து 99 ரன்களும் ஆசிப் செய்க் அரைசதம் அடித்து 66 ரன்களும் சேர்த்தனர். குஷால் மல்லா 41 ரன்களும், ரோஹித் பவுடெல் 31 ரன்களும் சேர்த்தனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நேபாளம் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே அணியில் பந்துவீச்சில் நகர்வா 4 விக்கெட்டுக்களையும், மசகட்ஸ்சா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து ஜிம்பாப்வே அணிக்கு 291 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
291 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் ஜோய்லோர்ட் கும்ப்ளே 25 ரன்களும் வெஸ்லே மதவெரே 32 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஆடிய தொடக்க வீரர் க்ரியாக் எர்வின் அவர்கள் சதம் அடித்தார். இவருடன் சேர்ந்து ஆடிய சீன் வில்லியம்ஸ் அவர்களும் சதம் அடித்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் லீக் சுற்றில் வெற்றி பெற்றது.
சதமடித்த க்ரியாக் எர்வின் 121 ரன்களும், சீன் வில்லியம்ஸ் சதம் அடித்து 102 ரன்களும் சேர்த்தார். நேபாளம் அணியில் பந்து வீச்சில் சோம்பால் கமி, குல்சன் ஜா இருவரும் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
நேற்று(ஜூன் 18) நடைபெற்ற மற்றொரு போட்டியில் மேற்க்கிந்திய தீவுகள் அணியும் அமெரிக்கா அணியும் மோதியது. இதில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 10 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 298 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய அமெரிக்கா அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
இதையடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் பேட்டிங்கில்  அரைசதம் அடித்து 56 ரன்கள் சேர்த்து பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை கைப்பற்றிய ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருதை வென்றார்.