ஹாட்ரிக் அடித்த சுனில் சேத்ரி! அதிரடியாக பாகிஸ்தானை வென்று வெற்றி வாகை சூடிய இந்தியா!
பெங்களூருவில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பாகிஸ்தானை 4-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
8 அணிகள் விளையாடும் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் இன்று பெங்களூருவில் தொடங்கியது. இதில் A மற்றும் B என இரண்டு பிரிவுகளில் அணிகள் விளையாடி வருகின்றன. A பிரிவில் இந்தியா,நேபாளம் பாகிஸ்தான் குவைத் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பி பிரிவில் வங்கதேசம், லெபனான், மாலத்தீவுகள், பூடான், ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணி இன்று தொடக்க ஆட்டத்திலேயே தனது பரம எதிரியான பாகிஸ்தானை பெங்களூரில் உள்ள ஸ்ரீ கண்டிரவா மைதானத்தில் சந்தித்தது. கிரிக்கெட்டில் மட்டும் பாகிஸ்தான் நமது எதிரி அல்ல. கால்பந்திலும் தான்.
இதையடுத்து ஆட்டம் தொடங்கிய நேரம் முதலே இந்திய அணியின் கை ஓங்கி இருந்தது. ஆட்டம் ஆரம்பித்த 10 வது நிமிடத்தில் சுனில் சேத்ரி ஒரு கோல் அடித்தார். இதன் மூலம் இந்திய அணி ஆட்டம் தொடங்கியதுமே முன்னிலை பெற்றது.
அதேபோல் ஆட்டத்தின் 16- வயது நிமிடம், மற்றும் 74 வது நிமிடத்தில் சுனில் சேத்ரி இந்தியாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார். இதில் மொத்தமாக 3 கோல் அடித்துள்ளார். இதன் மூலம் இந்த விளையாட்டில் இவர் ஹாட்ரிக் கோல் அடித்துள்ளார்.
அடுத்ததாக ஆட்டத்தின் 81 வது நிமிடத்தில் உதாண்டா சிங் ஒரு கோல் அடித்தார். ஆனால் எவ்வளவு போராடியும் பாகிஸ்தான் அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க இயலவில்லை. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இறுதியாக 4-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.