இவைகள் எல்லாம் மாற்றப்பட்டால்!!சாமானிய மக்களை நேரடியாக பாதிக்குமா ?? வெளிவந்த தகவல் !!
ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் வரப்போவதாக தகவல் வந்துள்ளது. இந்த வருடத்தில் தொடக்கத்தில் இருந்தே மாதம்தோறும் சிலிண்டர் மற்றும் மின்சார வாகனங்கள் போன்ற பல பொருட்களில் விலையில் சில மாற்றம் ஏற்பட்டு வருகிறது.
மேலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கிரெடிட் கார்டு மூலம் 7 லட்சம் மேல் செலவு செய்தால் 20% டிசிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டும். அதனையடுத்து சிஎன்ஜி விலை மாற்றம் போன்ற பல மாற்றங்கள் ஜூலை முதல் அமுல் படுத்தப்படும் என்று அறிவிதிருந்தத்து.
இந்த நிலையில் ஜூலை தொடங்க உள்ள நிலையில் மக்களுக்கு தொடர்புடைய பல விஷயங்களில் நேரடியாக சில மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது. மேலும் வீட்டுக்கு தேவையான பல பொருட்களில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஜூலை மாதம் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது.
இவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்த படுவதால் சாமானிய மக்கள் நேரடியாக பதிக்கப்படுகிறார்கள். மேலும் இது போல தரமில்லாத செருப்பு மற்றும் காலணி உற்பத்திக்கு கட்டுப்பாடு போன்ற மாற்றங்களால் உற்பத்தியாளர்கள் பாதிக்க படுவார்கள்.
இதனையடுத்து வரி செலுத்துவார்கள் வருமான வரி கணக்கை ஜூலை 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். இது போல இன்னும் பல மாற்றங்கள் ஜூலை முதல் அமுல் படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.