தமிழக விவசாயிகளுக்கு இரண்டு நாள் வேளாண் திருவிழா!! அனுமதி இலவசம் மகிழ்ச்சியில் விவசாயிகள் சூப்பர் நியூஸ்!!
தமிழ்நாட்டில் விவசாயத்தை கொண்டாடும் வகையில் இரண்டு நாள் வேளாண் திருவிழா என்று அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜூலை 8 ஆம் தேதி மற்றும் ஜூலை 9 ஆம் தேதி மாபெரும் வேளாண் திருவிழா நடைபெறவுள்ளது.
இந்த திருவிழாவில் விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த பொருட்கள் காட்சி படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு உழவர் உற்பத்தியாளர் அமைப்பு விவசாயிகள் நலத்துறையுடன் இணைந்து விவசாயிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் திருவிழாவை நடத்து முடிவு செய்துள்ளது.
அவர்களுக்கு சந்தை உருவாகவும் மாபெரும் வேளாண் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிக திருவிழா நடத்தப்படவுள்ளது. மேலும் இதில் 300 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் வேளாண் பொருட்கள் திருவிழாவில் காட்சிப்படுத்தப்படும். அதனையடுத்து விவசாயிகளின் வேளாண் பொருட்கள் விற்பனையும் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
100 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் திருவிழா விவசாயிகளின் எதிர்காலத்திற்கு பயனுள்ளதாக அமையும் என்று நம்பப்படுகிறது . இந்த விழா நடைபெறுவது விவசாயிகளை பெருமை படுத்தும் வகையில் அமையும் என அறிவித்துள்ளது. இந்த திருவிழாவை காண பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் என்று தெரிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளதாக தகவல் வந்துள்ளது.