விருப்பம் இல்லாமல் வெளியேறும் விக்ரம்!! இனி படத்தின் நிலைமை!!
நடிகர் சியான் விக்ரமின் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வம். அந்த படத்தில் அவர் ஆதித்த கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரள வைத்திருப்பார்.
இவர் இப்பொழுது நடித்து வருகின்ற படம் தங்கலான், இவற்றில் இளமையான தோற்றம் மற்றும் வயதான தோற்றம் என்ற இரட்டை வேடத்தில் நடிக்கின்றார்.
இந்தநிலையில் சியான் விக்ரம் அவர்கள் ஒரு படத்தில் நடிப்பதாக விருப்பமில்லாமல் ஒப்புக்கொண்டு அந்த முழு படத்தையும் நடித்து முடித்து இருக்கின்றார்.
கடந்த 2017 ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்துள்ளார்.
படத்தில் படப்பிடிப்பின் பொழுது விக்ரமுக்கு சந்தேகமாக இருந்தது.இந்த படம் எந்த ஒரு கதைகளமும் இல்லாமல் எடுப்பது போன்று அவருக்கு தோன்றியது.
அதனால் விக்ரம் படத்தின் இயக்குனரான கௌதம் மேனனிடம் இந்த படத்தின் கதை முழுவதையும் கூறுங்கள் என்றார்.பின்பு அந்த கதையை கேட்டதும் விக்ரமிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
அதன்பிறகு விக்ரம் படபிடிப்புக்கு வரவே இல்லை மீண்டும் சில நாட்கள் கழித்து அவ்வப்போது வந்து படத்தின் இயக்குனர் கௌதம் மேனன் சொல்வதை மட்டும் செய்து விட்டு போவார். எப்படியோ இந்த படம் நிறைவு பெற்றது, இருப்பினும் இதன் ரிலீஸ் தேதி மட்டும் பல முறை தள்ளி போய் கொண்டே இருந்தது.
இறுதியாக இந்த படம் ஜூலை 14 ம் தேதி வெளியிடப்பட்டது. படக்குழுவின் நோக்கம் இந்த படம் வெற்றி பெறுவதை தாண்டி இந்த படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்திட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் கௌதம் மேனன் இருந்தார்.
தமிழ் சினிமாவில் இப்பொழுது வெளியாகும் படங்களில் பெரும்பாலும் கௌதம் மேனன் தான் வில்லனாக இருக்கின்றார். இருப்பினும் அவர் தற்பொழுது எந்த படத்தையும் இயக்கவில்லை நடிப்பதிலேயே அதிக அளவில் முனைப்பு காட்டி வருகிறார்.