இது உலக கோப்பை போட்டி மஞ்சள் உடை வேண்டாம்!! முன்னாள் கிரிக்கெட் வீரர் வேடிக்கையான பேட்டி!!
உலக கோப்பை போட்டிகள் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 10 அணிகள் கலந்துக் கொள்ள உள்ளார்கள். மேலும் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ப்ரிமேட்ச் ஸ்போர்ட்ஸ் சீருடை அறிமுக விழாவில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பங்கேற்றார் .
இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பேட்டியில் உலக கோப்பை போட்டிகள் புதிய உத்வேகத்தை தருகிறது என்றும் உலக கோப்பை போட்டிகளை காண ரசிகர்கள் யாரும் மஞ்சள் நிற உடையில் வந்து விடாதீர்க்ள என்றும் வேடிக்கையாக கூறினார்.
மேலும் அவர் இந்த டி.என்.பி.எல் தொடர் அதிக இளம் வீரர்களை வளர்த்து வருகிறது. இது இந்திய இளம் வீரர்கள் புதிய கட்டமைப்பு வளர்ச்சக்கும் உதவுகிறது என்றும் கூறியுள்ளார் . அதையடுத்து அவர் எதிர்காலத்தில் இந்திய கேப்டனாக மூத்த வீரர் அஸ்வினுக்கு தகுதி உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக கோப்பை போட்டிகள் இந்தியாவில் மீண்டும் நடப்பது ரசிகர்களுக்கு வீரர்களுக்கும் புதிய உத்வேகத்தை தரும் என்றும் கூறியுள்ளார். மேலும் இந்தியா அணி உலக கோப்பையை வெற்றி பெற வேண்டும் என்பது அனைவரின் ஆசை என்றும் கூறியுள்ளார். மேலும் உலக கோப்பையில் விளையாடுவதற்கு வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது என்று கூறினார்.