வாட்ஸ் அப் புதிய அப்டேட்!! இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ் வசதி!!
இனி புது மொபைலிலும் பழைய மெசேஜ், போட்டோஸ் மற்றும் வீடியோ போன்ற அனைத்து விவரங்களையும் சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது வெளியிட்ட புதிய அப்டேட்.
இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200 கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அடிக்கடி வாட்ஸ் அப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் இனி வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய போனில் இருக்கும் அனைத்து தகவல்களையும் புதிய போனிற்கு எளிதாக மாற்றி கொள்ள முடியும். இதன் மூலம் மெசேஜ், போட்டோ, வீடியோ மற்றும் ஆடியோ போன்ற விவரங்களை எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
ஆனால் இந்த புதிய அப்டேட் அண்டராய்டு அல்லது ஐஒஎஸ் என்ற ஒரே இயங்குதளம் கொண்ட மொபைலில் மட்டும் செயல்படும். அதனை மாற்றுவதற்கு முதலில் இரண்டு போன்களும் அருகருகே இருக்க வேண்டும் மற்றும் இரண்டு போன்களின் wi-fi இணைத்து இருக்க வேண்டும். மெசேஜ் மாற்ற வேண்டும் என்றால் முதலில் இரண்டு போன்களும் அருகில் வைத்திருக்க வேண்டும். மேலும் இதனை செயல்படுத்தும் போது லொக்கேஷன் சேவை இயக்கத்தில் இருக்க வேண்டும்.
அதனை தொடர்ந்து பழைய போனின் செட்டிங் சென்று அதில் சாட் பிரிவை தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் அதில் டிரான்ஸ்பர் சேட் தேர்வு செய்ய வேண்டும். மேலும் புதிய போனில் பழைய போனை வாட்ஸ் அப் ஸ்கேன் செய்ய வேண்டும்.
இதனை பயன்படுத்தில் எளிதாக அனைத்து விவரங்களும் மாற்றிக்கொள்ளலாம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் அறிவித்துள்ளது.