மீனவர்கள் 22 பேர் விடுதலை!! இலங்கை நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்திரவு!!
கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து தமிழக மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றுள்ளார்கள். இந்த நிலையில் மண்டப பகுதியை சேர்ந்த தேவா, நடராஜன், நாகாராஜன், சந்தியா, ஷிப்ரான் ஆகிய 5 மீனவர்களும் மீன்பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்கள்.
அதனை தொடர்ந்தது இன்று புதுகோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 450 பேர் 19 விசைப்படகு மூலம் மீன்பிடிக்க சென்றார்கள். அதில் தமிழரசன், பாஸ்கரன், முத்துசாமி, அரேன், குமார், உதயகுமார், அருநாத், குருமூர்த்தி, காளிமுத்து மற்றும் இன்னும் சிலர் மொத்தம் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளார்கள். அவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தாக கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புதன்கிழமை ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் மீனவர் ஆஜர்படுத்தபட்டனர். அதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, மொத்தம் 22 மீனர்வர்களை விடுதலை செய்ய உத்திரவிட்டனர். ஆனால் அவர்களின் 4 படகுகளை விடுவிக்க மறுத்துவிட்டனர். மேலும் நீதிபதிகள் மீனவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் விடுதலை செய்யப்பட 22 மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதனையடுத்து மீனவர்கள் இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று அதிகாரிகள் தெரித்துள்ளார்கள்.