ஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை ரத்தா? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
அமர்நாத் யாத்திரை சென்றால் பாவம் விலகும் என்று பலர் நம்பி வருகிறார்கள். மேலும் அமர்நாத் குகை கோவில் 5000 ஆண்டுகள் பழமையான கோவில் என்று பிரணங்களில் உள்ளது. இந்த குகை கோவில் 3880 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. ஆண்டுதோறும் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க லச்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை வருவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூலை 01 ஆம் தேதி துவங்கி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும் அமர்நாத் யாத்திரை செல்ல விரும்புவோர் ஆன்லைன் மூலமோ அல்லது நேரடியாகவோ முன்பதிவு செய்து கொள்ள பல ஏற்பாடுகள் செய்து தரப்பட்டது. இந்த யாத்திரை 62 நாட்கள் நடைபெற இருகிறது. அதனை தொடர்ந்து அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் புதிய யாத்திரை பயணத்தை மேற்கொண்டார்கள்.
இந்த யாத்திரை பயணம் ஆறு நாட்கள் முடிவடைத்தது. அதனையடுத்து யாத்திரை செல்லும் பகுதிகளில் மோசமான வானிலை தொடர்கிறது. இதனால் இன்று யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தகவல் வந்தது. மேலும் இது குறித்து அதிகாரிகள் அதிகார்வபூர்வமாக அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்கள்.