ஆளுநர் என்ன வில்லனா?? இல்லை செந்தில் பாலாஜி தான் புத்தரா?? திமுகவை விளாசும் அண்ணாமலை!!
தமிழ்நாட்டில் ஆளுனரை வில்லனாக திமுகவினர் சித்தரித்து வருகின்றனர் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை கூறியதாவது,
தமிழகத்தில் ஆளுநருக்கு மரியாதையே இல்லாத நிலையை திமுக அரசு கொண்டுவந்துள்ளது. என்னவோ ஆளுநர் கொடூரமான வில்லனாகவும், செந்தில் பாலாஜி தான் உத்தமராகவும், போதி மரத்தடி புத்தராகவும் சித்தரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்கள் தங்கள் தவறுகளை மறைக்கவென்று ஆளுனரை வில்லனாகவே காட்டி வருகின்றனர்.
திமுக அரசு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளை விட்டு ஆளுனரை சீண்டுவதை குறிக்கோளாக கொண்டுள்ளது. ஒரு மாநிலத்தின் கவர்னரை ஒருமையில் பேசி தரக்குறைவாக விமர்சிப்பது மிகவும் தவறான ஒன்றாகும். அவருக்கு மரியாதை என்பதே தமிழகத்தில் இல்லை. ஏன் தமிழக அரசு கூறுவதை கவர்னர் அப்படியே ஒப்பிக்க வேண்டும் என கட்டாயம் உள்ளதா?? கவர்னர் அரசியலை பேசக் கூடாது என நானே கூறியுள்ளேன். அதற்கு அவரை தவறான முறையில் வில்லனாக திமுக அரசு காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.
முதல்வர் ஸ்டாலின் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியது அவரது தோல்வி பயத்தை காட்டுகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் குற்றவாளிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிட்டது. அரசின் கட்டுப்பாட்டில் சட்டம், ஒழுங்கு என்பதே இல்லாமல் போய்விட்டது. குற்றங்கள் பெருகி விட்டது என்று அவர் கூறினார்.