+2 படித்த மாணவர்கள் கல்லூரியில் படிக்க கல்வி உதவித்தொகை!! விண்ணப்பிப்பது எப்படி??
நம் நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை, ஆனால் பல மாணவர்களின் நிதி நிலை காரணமாக அவர்களின் கல்வி கனவுகளை நனவாக்க முடியவில்லை. இதை போக்க, மாநில மற்றும் மத்திய அரசு மற்றும் பல அமைப்புகள் திறமையான மற்றும் தேவைப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்குகின்றன.
உதவித்தொகைகளில் முக்கியமாக இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தகுதி அடிப்படையிலானது மற்றொன்று தேர்வு அடிப்படையிலானது.
பன்னிரண்டாம் வகுப்பில் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர் உயர்கல்வி பயில மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெறலாம். அதனை எப்படி பெறுவது, யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பதை இப்போது பார்ப்போம்.
ஏழை எளிய மக்களும் படிக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு ஆனது பல்வேறு உதவித்தொகைகளை மாணவர்களுக்காக வழங்கி வருகின்றது.
இந்த உதவி தொகையை பெரும் மாணவர்கள் 12 ஆம் வகுப்பில் 80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் விண்ணப்பிக்கும் மாணவர்கள் தொலைதூரக் கல்வி பயில முடியாது. இதுவரை எந்தவித உதவி தொகையும் மதியம் மற்றும் மாநில அரசிடம் பெற்றிருக்கக் கூடாது.
படிக்க விரும்பும் மாணவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் மற்றும் பல்கலைக்கழகங்களில் மட்டும் தான் சேர முடியும்.
மேலும் குடும்ப வருமானம் 4.5 லட்சத்திற்கும் கீழாக இருக்க வேண்டும். இதற்கான வருமானச் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் இதை நீங்கள் பயிலும் கல்லூரிகளில் கொடுக்க வேண்டும்.
மாணவர்கள் தங்களுடைய உதவித்தொகை கோரலை, வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக புதுப்பிக்க வேண்டும். கல்லூரிகளில் நடக்கும் தேர்வுகளில் குறைந்தது 50% மதிப்பெண்களும், 75% வருகை புரிதலும் அவசியம் இருக்க வேண்டும். கல்லூரியில் எந்த விதமான ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இளநிலை கல்விக்கு விண்ணப்பித்து உதவித்தொகை பெற்றவர்கள் மட்டுமே முதுகலை பயிலும்போது உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக கட்டாய வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள் என்னவென்றால்,
1: மதிப்பெண் சான்றிதழ்
2: வருமானச் சான்றிதழ்
3: வகுப்பு சான்றிதழ
4: ஆதார் கார்டு
5: Bonafide சான்றிதழ்
6: பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
இதனை நீங்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் மாணவர்கள் அரசு அதிகாரப்பூர்வமாக கொடுத்த https://scholarships.gov.in என்ற வெப்சைட்டில் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விண்ணப்பத்திற்கு தகுதி பெற்ற நபர்களுக்கு ரூ.10000 முதல் ரூ.20,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.