Breaking News, National, News

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம் நாளை நிலவு பயணம்!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! 

Photo of author

By Jeevitha

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம் நாளை நிலவு பயணம்!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!! 

Jeevitha

Button

இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விண்கலம் நாளை நிலவு பயணம்!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்!!

இந்திய  விண்வெளி ஆய்வு நிறுவனம் நிலவை ஆய்வு செயவதற்கு 2008 ஆம் ஆண்டு சந்திராயன்1 விண்ணில் செலுத்தப்பட்டது. அந்த விண்கலம் நிலவில் தண்ணீர் இருக்கிறது என்று உறுதி செய்தது. மேலும் அந்த ஆதாரங்களை ஆய்வு செய்ததில் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதியானது. அதன் பின் மீண்டும் நிலவை ஆராய்ச்சி செய்ய இஸ்ரோ நிறுவனம் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்கியது.

அதனையடுத்து சந்திராயன் 2 விண்கலன் நவீன வசதிகளுடன்  உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த விண்கலம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவில் மோதி செயலிழந்தது. அதன் பின் இஸ்ரோ நிறுவனம் மீண்டும் சந்திராயன் 3 விண்கலம் உருவாக்க திட்டமிடப்பட்டது. இந்த விண்கலம் நிலவை முழுவதும் ஆய்வு செய்யும் வகையில் உருவாக்க திட்டமிடப்பட்டது.

இந்த நிலையில் சந்திராயன் 3 விண்கலம் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜூலை மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நிலவிற்கு ஏவப்பட உள்ளது. மேலும் இந்தியா அனுப்ப உள்ள சந்திராயன் 3 விண்கலன் மட்டுமே நிலவின் தென் துருவத்தில் பயணிக்க உள்ளது.

மேலும் இந்த விண்கலம் வெற்றிகரமாக விண்ணியில் ஏவப்பட்டால் நிலவு குறித்து அதிகபடியான உண்மைகள் வெளிவரும். இது சந்திராயன் 2 விலிருந்து அப்டேட் செய்யப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இது அதிக தொழில்நுட்ப வசதிகள் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ரோவர்கள்  நிலவை சுற்றி ஆய்வு செய்யும் வகையில் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கலத்தை பூமியில் இருந்து எல்.வி.எம்.3 ராக்கெட் நிலவிற்கு கொண்டு செல்ல இருக்கிறது. இந்த சந்திராயன் 3 நாளை செலுத்தப்பட உள்ளதால்  அதற்கான கவுண்டவுன் இன்று தொடங்குகிறது. இந்த விண்கலன்  இந்தியாவிற்கு மிக பெரியளவில் பெருமை சேர்க்க உள்ளது.

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம் தகவல்!! 

ஆபாச வீடியோவால் பதறிய MLA!! பணம் பறிப்பு -மாட்டிய பெண்!!