விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

0
105

விஜய்யை திருமணம் செய்ய ஆசை! பிரபல நடிகை பேட்டி

தளபதி விஜய் மற்றும் நடிகர் தனுஷ் இவர்கள் இருவரும் தங்களது சினிமாவின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் மோசமான விமர்சனங்களை சந்தித்தவர்கள். தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் இவர்கள் இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்கின்றனர்.

தனுஷ் தற்போது தமிழ் திரைப்பட உலகில் மட்டுமில்லாமல் ஹாலிவுட் படத்திலும் நடித்து புகழ் பெற்றார் .தற்போது ஹிந்தி படத்திலும் அக்க்ஷய் குமாருடன் நடித்துவருகிறார் . மாரி செல்வராஜ் உடன் “கர்ணன்’ மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “மாஸ்டர்” படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மாஸ்டர் படத்தின் ரிலீசுக்காக தளபதி ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஜீவா நடித்து வெளிவந்த ஜிப்ஸி படத்தின் கதாநாயகி பேட்டி ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது எனக்கு நடிகர் தனுஷை மிகவும் பிடிக்கும் எனவும் அவருடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருக்கிறது என்றும் தளபதி விஜய்யை திருமணம் செய்ய வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

Previous articleதல தோனிக்கு மிகவும் பிடித்த தமிழ் நடிகர்கள் இவர்கள் தான்! பிரமித்துப் போன ரசிகர்கள்
Next articleஇந்தியாவில் கொரோனாவுக்கு பலியான வாலிபர்! உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆக உயர்வு