மழைக் காலக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் எம்.பிக்கள் கூட்டம்!!  பல பிரச்சனைகளுக்கு முடிவு வெளிவந்த தகவல்!!

0
78
A gathering of M.P.s raising questions in the rainy season session!! The solution to many problems has been revealed!!
A gathering of M.P.s raising questions in the rainy season session!! The solution to many problems has been revealed!!

மழைக் காலக் கூட்டத் தொடரில் கேள்வி எழுப்பும் எம்.பிக்கள் கூட்டம்!!  பல பிரச்சனைகளுக்கு முடிவு வெளிவந்த தகவல்!!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் ஜூலை 20  அம்தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  மேலும் அந்த கூட்டத் தொடரில் 17 அமர்வுகள், 23 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டம் புதுடெல்லி கடந்த மே மாதம் 28 ஆம் தேதி திறக்கப்பட்ட நாடாளுமன்ற கட்டத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளுக்கு கலந்து கொள்ள அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்துள்ளதுள்ளார்.

இந்த நிலையில் தமிழக அரசு மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் வரும் ஜூலை 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் காலை 10.30 அளவில் தொடங்கும் என்றும் அறிவித்திருந்தது.இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் மற்றும் திமுக சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்த கொள்ள உள்ளார்கள் என்று தெரிவித்திருந்தது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சனைகள் குறித்து எம்.பி., க்களுக்கு ஆலோசனை வழங்கப்பட இருந்தது. அதில் முக்கியமாக கவர்னர் ஆர்.என்.ரவி பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் இந்த கூடத்தில் அனைத்து மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. மேலும் இந்த கூடத்தில் மழைக்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதில் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா போன்ற மாநிலங்களவை மற்றும் மக்களவை உரினர்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசு தமிழ் நாட்டை புறக்கணித்து வருவது குறித்து கேள்வி எழுப்ப உள்ளது. மேலும் ஜி.எஸ்.டி. வரி பங்களிப்பு உரிய நிதி , பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தராமல் இருப்பது, மணிப்பூர்,விலைவாசி, மின்கட்டணம் ஏற்றம் , ஆளுநர் பிரச்சனை , ரயில்வே திட்டம் புறக்கணித்துள்ளது, நீட் தேர்வு, தமிழ் மொழி புறக்கணிப்பு இது போன்ற பல பிரச்சனைகளுக்கு திமுக எம்.பி. க்கள் குரல் எழுப்பயுள்ளர்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Previous articleலைசன்ஸ் எடுக்கும் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அப்டேட்!!
Next articleபுனித யாத்திரையில் 13 நாட்களில் 19 பேர் பலி!! அதிர்ச்சி தகவல்!!