இன்று முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள்!! இலவச புத்தகங்கள் வழங்கும் முதல்வர்!!
காமராஜர் 1954 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் முதலமைச்சராக பதவியேற்றார். இவர் 9 ஆண்டுகள் முதல்வர் பணியை செய்து வந்தார். இவர் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். மேலும் இவர் முதல்வராக பதவில் இருக்கும் பொது மக்களுக்கு பல திட்டங்களை செய்து கொடுத்துள்ளார். அதனையடுத்து இவர் கல்விக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார். இதனால் இவரை கல்வி கண் திறந்த வள்ளல் என்றும் அழைக்கபட்டவர்.
இந்த நிலையில் இன்று முன்னாள் முதலவர் காமராஜர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் இவர் பிறந்த நாளை தமிழகத்தில் சிறப்பாக கொண்டப்படுக்கிறது. அதனையடுத்து இவர் கொண்டு வந்த மத்திய உணவு திட்டம் இன்று வரை தமிழக அரசு பள்ளிகளில் செயல்பட்டு வருகிறது.
மேலும் இவர் பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் பல நலத்திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. தமிழக பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாள் கொண்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்வர் மு.கஸ்டாலின் சென்னை நங்கநல்லூரில் நேரு அரசு ஆண்கள் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் அவருக்கு வழங்கப்பட்ட 7, 740 புத்தங்களை அரசு பொது நூலகத்திற்கு வழங்க உள்ளார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொள்ள உள்ளார்.