துண்டிக்கப்பட்டு கிடந்த சிறுவனின் தலை!! இணைத்து வைத்து சாதனை படைத்த மருத்துவர்கள்!!
தலை துண்டிக்கப்பட்டு கிடந்த சிறுவனின் தலையை ஒட்ட வைத்து இஸ்ரேல் மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் மருத்தவ முறைகள் பல மடங்கு வளர்ந்து வருகின்றது. பல தொழில்நுட்பங்களை வைத்து இன்றைய காலத்தில் நம்மால் நம்பமுடியாத அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்து வருகின்றனர். இதயம் மாற்று அறுவை சிகிச்சை தற்போதைய காலத்தில் எளிமையாகிவிட்டது. அதே போல் பல சிகிச்சைகள் லேசர் தொழில்நுட்பம் மூலமாக நடைபெற்று வருகின்றது.
தற்போது உள்ள தொழில்நுட்பத்தை வைத்து உடலில் துண்டான உறுப்புகளை கூட இணைத்து வைத்து சிகிச்சை செய்யப்படுகின்றது. அதே போல உடலினுள் உள்ள உறுப்புகளுக்கு எதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும் அதையும் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் மருத்துவ முறைகளும் இன்று உள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் கிட்டத்தட்ட தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த சிறுவனக்கு சிகிச்சை அளித்து அந்த சிறுவனின் தலையை இணைத்து அந்த சிறுவனை உயிர் பிழைக்கச் செய்துள்ளனர் இஸ்ரேல் மருத்துவர்கள்.
இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர் சுலைமான் ஹசன் என்ற சிறுவன். இந்த சிறுவன் மீது கார் மோதியதில் சுலைமான் ஹசனின் தலை கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டு விட்டது போல இருந்தது. இதையடுத்து நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளித்த இஸ்ரேல் மருத்துவர்கள் சில மணி நேரங்களிலேயே அந்த சிறுவனின் தலையை இணைத்து உயிர் பிழைக்கவும் செய்துள்ளனர். இதையடுத்து குணமடைந்த அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.