இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான கட் ஆப் அதிகரிப்பு!! அதிர்ச்சியில் மாணவர்கள்!!
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்று முடிவடைந்தது. அதற்கு அடுத்து கடந்த மே மாதம் 8 ஆம் தேதி +2 பொதுத்தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்தது. அந்த முடிவுகளில் அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி என்ற முடிவு வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து மருத்துவ தகுதி தேர்வான நீட் தேர்வு நடத்தப்பட்டது
இந்த நீட் தேர்வு 2019 ஆம் ஆண்டு தேசிய மருத்துவ வாரியம் புதிய சட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை மருத்துவ பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது.
அதனையடுத்து இதன் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுக்கு பல விதிமுறைகளை தேசிய மருத்துவ ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் நாடு முவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளிவந்தது. அதனையடுத்து ஜூலை 12 ஆம் தேதி மருத்துவ படிப்பிற்கான இளங்கலை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அந்த படிப்புள் சேர்வதற்கு தரவரிசை பட்டியல் வெளிவந்துள்ளது. மேலும் அதில் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம்பிடித்த மாணவர்கள் பட்டியல் வெளிவந்துள்ளது.
மேலும் இதற்கான கலந்தாய்வு ஜூலை 25 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனையடுத்து இந்த வருடம் மருத்துவ படிப்பிற்கு சேர கடும் போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டுகள் மருத்துவ படிப்பிற்கு சேர கட் ஆப் மதிப்பெண் 580 ஆக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 600 முதல் 602 வரை அதிகரித்துள்ளது. இந்த தகவல் மருத்துவம் படிக்க ஆசைபடும் மாணவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.