முதல்வர் கோப்பை போட்டிகளில் லட்சத்தை தட்டி சென்ற மாவட்டங்கள்!! உற்சாகத்தில் வீரர்கள்!!
மாநில அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இந்த நிலையில் ஏற்கனவே முதவர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அந்தந்த மாவட்டங்களில் மண்டல அளவில் நடைபெற்றது.
அதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொது மக்கள், அரசு உழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவில் போட்டிகள் நடைபெற்றது. மேலும் ஆண் பெண் இருபாலருக்கும் தனி தனியாக மாவட்ட அளவில் 42 வகையானப் போட்டிகளுக்கு, மண்டல அளவில் 8 வகையானப் போட்டிகளும் நடத்தப்பட்டது. அதன் அந்தந்த மாவட்டங்களில் வெற்றி பெற்ற வீரர்கள் சென்னையில் நடைபெற்ற முதலவர் கோப்பையில் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை,கடலூர், கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமாரி அணிகள் மாணவர்கள் பிரிவிலும், கடலூர், நாமக்கல், திருவாரூர் மற்றும் சேலம் அணிகள் மகளிர் பிரிவிலும் நடைபெற்றது. இந்தன் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் மாணவியர் பிரிவில் நாமக்கல் அணி 7 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் இடத்தை திருவாரூர் மற்றும் மூன்றாம் இடத்தை கடலூர் அணி பெற்றது.
மாணவர்கள் பிரிவில் 7 புள்ளிகளுடன் கடலூர் முதலிடம் பிடித்தது. மேலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை கன்னியாகுமாரி, சென்னை பெற்றது. மேலும் இந்த போட்டிகளில் முதலிடன் பிடித்த அணிக்கு 9.00 லட்சமும் முதல்வர் கோப்பையும் வழங்கப்பட்டது. அதனையடுத்து இடண்டாம் இடத்திற்கு 6.75 லட்சமும் பதக்கங்களும், மூன்றாம் இடம் பெற்ற அணிக்கு 4.50 லட்சமும் பத்தங்களும் வழங்கப்பட்டது.