முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!! 

0
93
Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!
Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!Minister Ponmudi met the Prime Minister!! Advice on enforcement department check!!

முதல்வரை சந்தித்த அமைச்சர் பொன்முடி!! அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை!!

அமலாக்கத்துறை  ஜூலை 17 ஆம் தேதி உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் சோதனை நடத்தியது. அதற்கு காரணம்  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்த போது விதிமுறைகளை மீறி செம்மண் எடுத்து அதன் மூலம் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  அந்த வழக்கிற்கு தற்போது சோதனை நடத்தப்பட்டது.

அதனையடுத்து 17 ஆம் தேதி உயர்கல்வித்துறை அமைச்சர் வீட்டில் சோதனை  தீவரமாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீதர காலனியில் அமைச்சர் வீடு மற்றும் விழுப்புரத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு சொந்தமான 9 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பின் அவரை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள். அதனை தொடர்ந்து 5 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் நேற்று மாலை நேரில் ஆஜராகி அமைச்சர் விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் அவருக்கு ஆதரவாக தமிழக முதல்வர் பேசி வந்தார். அதனை  தொடர்ந்து நேற்று தொலைபேசியில் உயர்கல்வித்துறை அமைச்சரிடம் பேசினார். இதனையடுத்து இன்று முதல்வர் இல்லத்தில் நேரில் சந்தித்த அமைச்சர் பொன்முடி அவரிடம் ஆலோசனை பெற்றார். அந்த சந்திப்பில் அமலாக்கத்துறை சோதனை குறித்து ஆலோசனை நடத்தினார்.

Previous articleகோவில்களில் செல்போன் பயன்படுத்த கூடாது!! காரணம் இது தான்!!
Next articleநாளை தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்!! கேள்வி எழுப்ப தயாராகும் எதிர்கட்சிகள்!!