50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

0
117

50 ரூபாய் செலுத்தினால் போதும்!! இனி தொலைந்த ஆவணங்களை மறுபடியும் பெறலாம்!!

உங்களின் முக்கிய ஆவணங்களான ஆதார் , பான் கார்டு மற்றும் டிரைவிங் லைசென்ஸ் போன்ற முக்கிய ஆவணங்களை தொலைத்து விட்டீர்களா கவலையை விடுங்கள் இந்த பதிவின் மூலம் அவற்றை எவ்வாறு திரும்ப பெறுவது என்று தெரிந்து கொள்ளலாம்.

இன்று உள்ள சூழலில் மக்களை பெரிதும் நம்புவதுடன் அரசால் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஆவணங்களை தான் அதிக அளவு நம்புகிறார்கள். முன்பெல்லாம் முக்கிய ஆவணங்கள் ஏதேனும் தொலைந்து விட்டால், அதற்காக நீங்கள் மாத கணக்கில் நடையாய் நடக்க வேண்டியிருக்கும்.

அப்படி நடந்தாலும் எளிதில் கிடைத்து விடாது.
ஆனால் இன்று அப்படியில்லை இருந்த இடத்தில் இருந்து கொண்டே, ஆன்லைன் டவுன்லோட் செய்து எடுத்துக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் மாத கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

நீங்கள் எதை செய்ய வேண்டும் என்றாலும் அதற்கு கட்டாயமாக இந்த ஆவணங்கள் வேண்டும். அவ்வாறு உள்ள பட்சத்தில் தொலைத்துவிட்ட ஆவணங்களை எவ்வாறு திரும்ப பெறுவது பார்க்கலாம்.

ஆதார் கார்டை எவ்வாறு திரும்ப பெறலாம்

  • முதலில் நீங்கள் uidai.gov.in என்ற இணையத்தில் உள்நுழைய வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் ஆதார மீட்டெடுப்பதற்காக யுஐடி அல்லது ஈஐடி யைப் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில் உங்கள் ஆதாரில் உள்ள பெயர் , பதிவு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி முதலியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
  • இவை அனைத்தும் சரியாக உள்ளதா என்று பார்த்த பின்பு OTP என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு உங்கள் ஆதார் கார்டில் உள்ள தொலைபேசி எண்ணிற்கு ஒரு OTP வரும்.
  • பின்னர் OTP யை பதிவு செய்து submit கொடுக்கவும்.
  • அடுத்த பக்கத்தில் mark payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும்.
  • பணத்தை செலுத்திய பிறகு பத்து நாட்களுக்குள் உங்களது ஆதார் கார்டு மின்னஞ்சல் முகவரிக்கு வந்துவிடும்.

பான் கார்டை எவ்வாறு திரும்ப பெறலாம்

  • முதலில் நீங்கள் https://www.incometax.gov.in/iec/foportal/என்ற இணையத்தில் உள்நுழைய வேண்டும்.
  • உங்களது பான் கார்டன் மீட்டு எடுப்பதற்காக Our services ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
  • அதன் பிறகு கீழாக உள்ள E-pan என்பதை கிளிக் செய்யவும்.
  • அடுத்த பக்கத்தில் get new e-pan என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இவ்வாறு செய்வதன் மூலம் உங்களது தொலைந்து போன பான் கார்டு வீட்டிலிருந்தபடியே சுலபமாக பதிவு செய்து கொள்ளலாம்.

அதுவே உங்கள் டிரைவிங் லைசன்ஸ் தொலைந்து விட்டால் எவ்வாறு திரும்பப் பெறலாம்,

  • முதலில் நீங்கள் e-service.tnpolice.gov.in என்ற இணையதள பக்கத்தின் உள் நுழைய வேண்டும்.
  • அதில் உள்ள citizen என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதன் அடுத்த பக்கத்தில் வருகின்ற report என்கின்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் போன்ற அனைத்து தகவல்களையும் பதிவு செய்ய வேண்டும்.
  • அடுத்த பக்கத்தில் mark payment என்ற ஆப்ஷனை கிளிக் செய்து ஆன்லைன் மூலம் ரூ.50 செலுத்த வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவாகிவிடும்.

 

Previous articleஇன்ஜினியரிங் முடித்தவருக்கு BEL நிறுவனத்தின் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம் வாங்க!!
Next article10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்!!  இந்திய வனவியல் துறையில் வேலை செய்யலாம் உடனே விண்ணப்பியுங்கள்!!