விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க பணம் கொடுக்கும் வங்கி!! மகிழ்ச்சியில் விவசாயிகள்!!
மத்திய மற்றும் மாநில அரசுகள் வியசாயிகளுக்கு தேவையான பல வசதிகளை செய்து வருகிறது. மேலும் அவர்களுக்கு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. அதனையடுத்து பயிர் காப்பீட்டுத் திட்டம், மூலிகை சாகுபடிக்கு மானியத் திட்டம், தேசிய வேளாண் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு நிதி போன்ற திட்டங்ககளை விவசாயிகளுக்கு செய்துள்ளது.
மேலும் விவசாயத்தை மேம்படுத்த மானியங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கும் விவசாயிகளுக்கு வங்கி மூலம் கடன் வழங்கி வருகிறது. இதனை தொடர்ந்து இந்திய வங்கி பல்வேறு கடன் உதவிகளை செய்து வருகிறது. மேலும் இந்திய வங்கி விவசாயிகளுக்கு விவசாய கடன் வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்திய வங்கி வாடிக்கையாளர்களுக்கு டிரக்டார் வாங்குவதற்கு நிதி உதவி வழங்க வேண்டும் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் விவசாயி வாடிக்கையாளர்களை மேம்பபடுத்தும் வகையில் இந்தியாவின் முதன்மை டாஃபே மற்றும் டிஎம்டிஎல் நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதனை இந்திய வங்கி இயக்குனர் இம்ரான் அமீன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் இந்த ஒப்பந்தம் விவசாய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் தொடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டிரக்டார் வாங்க கடன் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை இந்தியா முழுவதும் உள்ள 5700 இந்திய வங்கி கிளைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.