முகம் வறட்சியாக இருக்கிறதா? இந்த இரண்டு பொருள்களை வைத்து வறட்சியை நீக்கலாம்!!
நம் முகம் எப்பொழுதுமே வறட்சியாக இருக்கிறது என்றால் இரண்டே பொருள்களை வைத்து முக வறட்சியை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முதலில் முகம் வறட்சி எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு முக வறட்சி என்பது தட்பவெப்ப நிலை காரணமாக அதாவது கோடை காலங்களில் ஏற்படும். ஒரு சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதால் முகம் வறட்சி அடையும். ஒரு சிலருக்கு தேமல் போன்ற தோல் நோய்கள் இருந்தாலும் முக வறட்சி ஏற்படும். சிலருக்கு வெந்நீரை பயன்படுத்தி குளிக்கும் பொழுது சரும வறட்சி ஏற்படும். மேலும் குளோரின் கலந்த தண்ணீரால் குளிக்கும் பொழுது முகம் படிப்படியாக வறட்சியாக மாறும். சருமத்திற்கு ஒத்து வராத மேக்கப் சாதனங்களை பயன்படுத்துவதாலும் இந்த வறட்சி ஏற்படும்.
இந்த முகவறட்சியை நாம் அடிக்கடி முகத்தை தொட்டு பார்ப்பது மூலமாக முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இந்த முக வறட்சியை சரி செய்வதற்கு ரோஸ் வாட்டர் மற்றும் கிளசரின் மட்டுமே போதுமானது.
முக வறட்சியை போக்கும் வழிமுறைகள்…
* இந்த ரோஸ் வாட்டர் மற்றும் கிளசரின் இரண்டையும் கலந்து முகத்திற்கு பயன்படுத்தும் பொழுது முக வறட்சி குணமடையும்.
* ஒரு டீஸ்பூன் காபித் தூளை ஒரு டீஸ்பூன் தண்ணீரில் நன்கு கலந்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் மாஸ்க் போல போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவினால் முக வறட்சி குணமடையும்.
* முக வறட்சி குணமடைய சிறிதளவு ஆலிவ் ஆயில் எடுத்து முகத்தில் தேய்க்க வேண்டும். பிறகு அதன் மேல் சூடான நீரில் நனைத்த துணியை போட்டு சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து விடலாம்.
* அவகேடா பழத்தை பாதி அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தேய்க்க வேண்டும். 15-20 நிமிடம் கழித்து சுத்தம் செய்யலாம்.
* வறண்ட சருமத்தை குணமாக்க வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு கப் ஓட்ஸ் சேர்த்து குளிக்கலாம்.
* இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் மீல் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதை முகத்தில் தேய்க்க வேண்டும். 15-20 நிமிடம் கழிந்து வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்யலாம்.