வீடு தேடி வரும் மின் பயனாளர்கள் சிறப்பு முகாம்!! மின் வாரியம் அதிரடி அறிவிப்பு!!
தமிழகத்தில் மாதம் தோறும் பராமரிப்பு பணிகளுக்கு மின்தடை ஏற்படும். மற்ற நேரங்களில் தமிழக அரசு தடையில்லா மின்சார சேவையை வழங்கி வருகிறது. மேலும் மக்களுக்கு சிரமத்தை குறைக்கும் வகையில் மின் வாரியம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மின் இணைப்பு பயனாளர்களுக்கு சிறப்பு முகாம் நடத்துவதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் லட்சக்கான மின் மீட்டர்கள் பழுதடைந்துள்ளது. அதன் பின் தமிழக மின் வாரியம் அனைத்து மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு புதிய உத்தரவிட்டியிருந்து.
அந்த உத்தரவில் பழுதடைந்த 2.06 லட்சம் மீட்டர்களை உடனடியாக சரி செய்து தருமாறு தெரிவித்திருந்தது. மேலும் ஒருமுனை பிரிவில் 1.74 லட்சமும், மும்முனை பிரிவில் 32,000 மீட்டர்களில் குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டு அதனை சரி செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் அந்த உத்தரவில் தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் மீட்டர்களை விரைவில் மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வீட்டு இணைப்பு மற்றும் பொது மின் இணைப்பு பயனாளர்கள் பெயர், முகவரி போன்றவைகள் மாற்றம் செய்ய ஜூலை 24 முதல் அனைத்து வேலை நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் ஞாயிறுக்கிழமை விடுமுறை என்று தெரிவித்தள்ளது.
மேலும் இந்த முகாம் பொது மக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த முகாமில் மின் பயனாளர்கள் கலந்து கொள்ள உரிய ஆவணங்கள் கொண்டு வருமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பெயர் மாற்றுவதற்கான கட்டணம் 726 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.