தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

Photo of author

By Sakthi

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

Sakthi

Updated on:

தோனி தமிழ் மொழியில் முதல் படம் தயாரிக்க இதுமட்டும் தான் காரணம்!! செய்தியாளர்கள் சந்திப்பில் படக்குழு பேட்டி!!

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரருமான எம்.எஸ் தோனி அவர்கள் தயாரிக்கும் முதல் படத்தை தமிழ் மொழியில் பண்ண இது தான் காரணம் என்று படக்குழு பேட்டி அளித்துள்ளது.

 

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள எல்.ஜி.எம் அதாவது லெட்ஸ் கெட் மேரியிட்(Lets Get’s Married) திரைப்படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் நடிகை இவானா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகை நதியா, நடிகர் யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

எல்.ஜி.எம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஆகியவற்றை வைத்தே திரைப்படம் காதலை மைய்யப்படுத்தி இருக்கும் என்று கணித்தனர். அதன்படி எல்.ஜி.எம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியான பிறகு இந்த திரைப்படம் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது உறுதியானது.

 

எல்.ஜி.எம் திரைப்படம் ஜூலை மாதம் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படக்குழு எல்.ஜி.எம் திரைப்படத்தின் புரொமோசன் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

லெட்ஸ் கெட் மேரியிட் திரைப்படம் எம்.எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி இணைந்து உருவாக்கியுள்ள தோனி எண்டெர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் திரைப்படம் ஆகும். தோனி தயாரிக்கும் முதல் திரைப்படமே தமிழ் மொழி திரைப்படமாக இருக்க காரணம் என்ன என்பதை எல்.ஜி.எம் படக்குழு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளது.

 

கோவை மாவட்டத்தில் எல்.ஜி.எம் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்பொழுது தமிழ்நாடு மக்களின் மீது கொண்ட அளவற்ற அன்பின் காரணமாகத்தான் தல தோனி அவர்கள் தனது முதல் திரைப்படத்தை தமிழ் மொழியில் தயாரிக்க முடிவு செய்தார்” என்று கூறினர்.