மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

0
37
Scholarship for disabled students!! Officially announced by the state government!!
Scholarship for disabled students!! Officially announced by the state government!!

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவித்தொகை!! அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழக அரசு!!

அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் செயல் பட்டுத்தப்பட்டு வருகின்றனர்.அதில் இலவச கல்வி,மதிய உணவு திட்டம் போன்றவை வழக்கப்படுகின்றது.தற்பொழுது காலை உணவும் பள்ளிகளில்  வழங்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு மாணவர்களின் நலன் கருதி செயல்படும் திட்டங்களில் இந்த இலவச பேருந்து திட்டமும் ஒன்றாகும்.இந்த வசதி தொலைதூர கல்வி பயிலும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பயன் பெரும் வகையில் அமைகின்றது.

இதன் மூலம் மட்டும் மொத்தம் தமிழகத்தில் 30 லட்சத்திற்கு  மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுகிறார்கள்.மேலும் தமிழக அரசானது எஸ்.டி மற்றும் எஸ்.சி மாணவர்களுக்கு என்றே சிறப்பு உதவித்தொகை வழங்கி வருகின்றது.இவ்வாறு  அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது.

அந்த வகையில் தமிழக மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித்தொகை மூலம் ஏராளமான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்பொழுது நடப்பு கல்வியாண்டிற்கான உதவித்தொகையை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.எனவே இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இந்த உதவித்தொகையை இரண்டு மடங்காக உயர்த்தித்தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.அதனால் இந்த உதவித்தொகையை பெரும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் தங்களுக்கு அருகில் உள்ள இ- சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல்  மாற்றுத்திறனாளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும் விதமாக அவர்களை அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டு வருகின்றது.

author avatar
Parthipan K