மஞ்சள் வீரனுக்கு ஓபனிங் சாங் பாடியது இவர்தான்… வெளியான சூப்பர் தகவல்!!
யூடியூபர் டிடிஎப் வாசன் நடிகராக அறிமுகம் ஆகும் மஞ்சள் வீரன் திரைப்படம் பற்றி சூப்பரான தகவல் கிடைத்துள்ளது.
டிடிஎப் வாசன் அவர்கள் தன்னுடைய பைக் சாகசங்கள் மூலமாக யூடியூப் சேனலில் பிரபலமானவர். டிடிஎப் வாசன் அவர்களுக்கு என்று தனியாக இரசிகர் கூட்டம் இருக்கின்றது. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு என்பது போல டிடிஎப் வாசன் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.
டிடிஎப் வாசன் அவர்கள் அவ்வப்போது பைக் சாகசங்கள் செய்து போலிஸ் வழக்குகளில் மாட்டுவதும் வழக்கமான ஒரு செயல்தான். இவர் அடுத்ததாக திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
யூடியூபர் டிடிஎப் வாசன் அவர்கள் நடிகராக அறிமுகம் ஆகும் திரைப்படதின் முதல் பார்வை சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. அந்த திரைப்படத்திற்கு மஞ்சள் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் வீரன் திரைப்படத்தை இயக்குநர் செல்அம் இயக்குகிறார். இந்த திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு மஞ்சள் வீரன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான தினத்தில் அதாவது அவருடைய பிறந்தநாளின் பொழுது நடைபெற்றது. அந்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கூல் சுரேஷ் அவர்களும் கலந்து கொண்டார். அதை வைத்து பார்க்கும் பொழுது மஞ்சள் வீரன் திரைப்படத்தில் நடிகர் கூல் சுரேஷ் அவர்களும் நடித்திருப்பார் என்று தெரிகின்றது.
இந்நிலையில் மஞ்சள் வீரன் திரைப்படத்தில் டிடிஎப் வாசன் அவர்களின் இன்ட்ரோ சாங்க் பாடியவர் யார் என்பது பற்றி தகவல் கிடைத்துள்ளது. இன்ட்ரோ சாங்க் பாடிய அந்த நபர் ராக்ஸ்டார் அனிருத் என்று தகவல் கிடைத்துள்ளது.
ராக்ஸ்டார் அனிருத் அவர்கள் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் பலருக்கும் இன்ட்ரோ சாங் பாடியுள்ளார். அவர்களின் வரிசையில் தற்பொழுது மஞ்சள் வீரன் டிடிஎப் வாசன் அவர்களுக்கும் இன்ட்ரோ சாங்க் பாடியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. எனினும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் படக்குழு தரப்பில் இருந்து வெளியாகவில்லை.