இன்று முதல் மகளிருக்கு ரூ 1000!! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

0
46

இன்று முதல் மகளிருக்கு ரூ 1000!! முதல்வரின் அதிரடி நடவடிக்கை!!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம் தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டத்தின் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக தருமபுரி மாவட்டத்தில் தொடங்கிவைக்கிறார்.

சென்னை : தி.மு.க. ஆட்சிக்குவந்தவுடன் மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று வாக்குறுதி குடுத்து ஆட்சிப்பொறுப்பேற்று 2.5 கடந்த நிலையில் மகளிருக்கான உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தாமல் நாட்களை நகர்த்திக்கொண்டு போகும் தி.மு.க. அரசை பல்வேறு கட்சியினரும் சாடினர்.

ஆட்சி பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்த முடியாமல் போனதுக்கு நிதிப்பற்றாக்குறை தான் காரணம் என்று தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்ட கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்தனர்.இந்நிலையில் கடந்த ஜூலை -7 அன்று முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இத்திட்டம் செயல்படுவது தொடர்பான ஆலோசனையை நடத்தினார்.

ஆலோசனைக்கு பிறகு அவர் தெரிவித்தது

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் -15 அண்ணா பிறந்தநாள் அன்று
‘கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ என்ற பெயரில் தொடங்கிவைக்கபடும்,மேலும் இத்திட்டத்திற்கு 7000 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டு தகுதியுள்ள 1 கோடி மகளிருக்கு இத்திட்டம் சென்றுசேரும்.தொடர்ந்து பேசிய முதலவர் இதற்கான முதற்கட்ட பணிகள் ஜூலை-20 அன்று தொடங்கி ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் விண்ணப்பங்கம் மற்றும் டோக்கன்கள் வழங்கப்படும் என்று முதல்வர் கூறியநிலையில் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்திசெய்து,விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்கள்,ஆதார் எண் இணைக்கப்பட்ட அலைபேசி உள்ளிட்டவைகளுடன் டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் முகாமிற்கு சென்று விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

தருமபுரியில் முகாமை தொடங்கிவைக்கும் முதல்வர்

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பத்தை இணையத்தில் பதிவேற்றுவதற்க்காக தமிழகம் முழுவதும் 35,923 முகாம்கள் நடத்த அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமை தொடங்கிவைத்து விழா மேடையில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுடன் திட்டம் குறித்து பேசவுள்ளார்.