அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

0
107
Smart class for government school students!! School Education Action Announcement!!
Smart class for government school students!! School Education Action Announcement!!

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பு!! பள்ளிகல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி, சைக்கிள், புத்தகம், நோட்டு போன்ற பல திட்டங்களை செயல்படுத்திவருகிறது. மற்ற மாநில அரசுகளும் பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை  அறிவித்தும் செயல்படுத்தியும் வருகிறது.

இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதனையடுத்து அதில் மாநில அளவில் சிறந்து விளங்கும் 25 பேரை தேர்வு செய்து வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.

இந்த விருதுகள் தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள 12 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் விருதுகள் வழங்கப்பட என்றும் நேற்று அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக காணொலி  வாயிலாக பாடங்களை கற்றுக்கொடுக்க ஒரு புதிய செயலியை பள்ளிக்கல்வித்துறை அறிமுகம் செய்திருந்தது.  அந்த செயலியை பயன்படுத்தி மாணவர்களில் எளிதில் படங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தது.

பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திய “மணற்கேணி” என்ற செயலியை பயன்படுத்தி தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் 27000 கருப்பொருள்களாக வகுப்புகளை தாண்டி அறிவை வளர்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளது.

மேலும் இந்த செயலியை ஆசிரியார்கள் பயன்படுத்தி அதில் உள்ள பாடப்பொருடகளின் உதவியை பெற்று மாணவர்களுக்கு புரியும்படி படங்களை நடத்தலாம் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டம் முதன் முறையாக தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது

இந்த செயலி வல்லுனர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் . மேலும் இந்த செயலி தமிழக அரசு கல்வி திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 27000 வகையான பாடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த செயலி மூலம் 25 லட்சம் மாணவர்கள் பயன்பெருவருகள் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Previous articleதிமுக மீது நம்பிக்கை கொள்ளும் அண்ணாமலை!! 32 மாதங்களில் நடக்கப்போவது என்ன??
Next articleபுதிய கல்விக் கொள்கை 12 மொழிகளில் பாடப்பிரிவு வசதிகள்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!