புதிய கல்விக் கொள்கை 12 மொழிகளில் பாடப்பிரிவு வசதிகள்!! மகிழ்ச்சியில் மாணவர்கள்!!
புதிய கல்விக்கொள்கை அமல்படுத்துவது தொடர்பாக மாலில ராசு மே 17 ஆம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டம் முன்னாள் இஸ்ரோ தலைவர் கஸ்துரி தலைமையில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழங்களில் ஒன்றாக உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைகழகங்கள் இணைந்து ஒரு பாட திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது. மேலும் வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல், இயற்பியல், வேதியியல், புவியியல், கணிதம், கணினி பொறி அறிவியியல் மற்றும் சமூக பொருளாதார நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகள் ஐந்தாண்டு ஒருங்கிணைந்து முதுகலை படிப்புகள் வர உள்ளது.
மேலும் இந்த ஆண்டும் முதல் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பல்கலைகழகங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரரிவித்துள்ளது . அதனை தொடர்ந்து புதிய மாற்றம் மத்திய பல்கலைகழகங்களில் கீழ் இயக்கம் அனைத்து கல்லூரிகளிலும் அமுல்படுத்தப்படும். மேலும் இந்த புதிய கல்விக் கொள்கை 12 மொழிகளில் பாடப்பிரிவு வசதிகள் இருக்கும் என்று துணைவேந்தர் அறிவித்துள்ளார். அந்த 12 மொழிகளில் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. இந்த புதிய கல்வி கொள்ளகையால் கல்லூரி மகிழ்ச்சியில் உள்ளார்கள்.