கால்நடை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியல் வெளியீடு!! சிறப்பு பிரிவில் சேலம் மாணவன் முதலிடம்!!
தமிழ்நாட்டில் 7 கால்நடை மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 3 கால்நடை உணவுத்துறை சார்ந்த மற்ற மருத்துவ கல்லூரிகலும் உள்ளது. ஜூன் 12 ஆம் தேதி இணைய வழியில் கால்நடை மருத்துவ படிப்பிற்க்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த ஆண்டு புதிய மருத்துவ படிப்புகள் மற்றும் புதிய கல்லூரிகள் எதுவும் தொடங்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது. தற்போது அதற்கான மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்த தரவரிசை பட்டியலை தமிழக கால்நாடை மருத்துவ அறிவியியல் பல்கலைகழகங்கம் இன்று 10 மணி அளவில் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த படிப்பிற்க்கான கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கும். மேலும் சிறப்பு கலந்தாய்வு 7.5% மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான கலந்தாய்வு நேரில் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து மற்ற பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் மூலம் நடைபெறும்.
மேலும் பொது பிரிவில் ராகுல்காந்த, மற்றும் கனிமொழி 200 மதிப்பெண் பெற்று முதல் இரு இடங்களைப் பெற்றுள்ளார்கள். மேலும் சிறப்பு பிரிவில் 7.5 சதவீததில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த விக்னேஷ் முதல் இடத்தை பிடித்துள்ளான்.
மேலும் கால்நாடை மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் www,adm.tanuvas.ac மற்றும் tanuvas.ac.in ஆகிய இணையத்தள பக்கத்திற்கு சென்று தரவரிசை பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.