விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!!

0
107
Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!
Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!Happy news for farmers!! Stalin launched free electricity scheme!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! இலவச மின்சார திட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்!!

தமிழக விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றது. அந்த வகையில்  விவசாய உற்பத்தியை பெருக்கவும் ,விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் ,விவசாயிகளின் தரத்தை உயர்த்தவும் அரசு பல சலுகைகளையும் மானியங்களையும் வழங்கி வருகின்றது.

அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு தருவதாக அறிவித்திருந்தது. ஒவ்வொரு வருடமும் 1 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது மேலும் 50000  விவசாயிகளுக்கு  இலவச மின்சாரம் வழங்க இலக்கு நிணிர்க்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரவக்குறிச்சி விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் முன்னிலையில் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தொடங்கிய ஒரு சில மாதங்களிலேயே 5000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருச்சியில் நடைபெற உள்ள வேளாண் கண்காட்சியில் நேற்று ஸ்டாலின் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சி திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகச்சியில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பாரம்பரிய நெல் விதைகளை பராமரித்து வரும் விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினர்.

மேலும் 50000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படம் திட்டத்தை முதல்வர் இன்று தொடங்கி  வைக்க உள்ளார்.இதற்காக அரசு  குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 1 லட்சத்தி 50000  விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை இன்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மேலும் இலவச மின்சாரத்திற்கு விண்ணப்பித்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதள்ளுபடி விலையில் சாம்சாங் ஸ்மார்ட் போன்கள்!! உடனே முந்துங்கள்!!
Next articleஜம்மு காஷ்மீரில் சீரற்ற வானிலை யாத்திரை தற்காலிக நிறுத்தமா? ஆலய அதிகாரிகள் வெளியிட்ட தகவல்!!