நானும் நடிக்க வருகிறேன் என்னையும் சேர்த்துகோங்க!! புதுமுக நடிகரை கண்டதும் அலறியடித்து ஓடிய படக்குழுவினர்!!
தொலைக்காட்சி தொடர் படபிடிப்பின் போது அங்கு புகுந்த சிறுத்தைபுலியை பார்த்து படபிடிப்புத் தளத்தில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். சுவாரஷ்யமான இந்த நிகழ்வு மராட்டிய மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பை நகரில் கோரிகாவன் மாவட்டத்தில் பிலிம் சிட்டி ஓன்று உள்ளது.இங்கு ஏராளமான தொலைக்காட்சி தொடர்கள்,திரைப்படங்கள் எடுப்பது வழக்கம். இந்த நிலையில் அங்கு சுக் மாஞ்சே நக்கி காய் அஸ்த என்ற தொலைக்காட்சி தொடர் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்த படப்பிடிப்பில் சுமார் 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துக் கொண்டனர். படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு தளத்தில் திடீரென சிறுத்தைப்புலி ஒன்று புகுந்து அங்கே படப்பிடிப்புக்காக போடப்பட்ட செட்டின்மீது ஏறி மெதுவாக நடந்துச் சென்றுள்ளது.
இதனை பார்த்ததும்அங்கிருந்த படக்குழுவினர் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர்.இந்த சம்பவத்திற்கு அனைத்து இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
அதன் தலைவர் சுரேஷ் சியாம்லால் குப்தா கூறுகையில் கடந்த , 10 நாட்களுக்குள் நடந்த 4-வது சம்பவம் இது. இதன்காரணமாக யாரேனும் விலங்கால் தாக்கப்பட்டு , உயிரிழந்திருக்க கூடும்.இந்த சம்பவத்திற்கு எதிராக அரசு எந்தவித கடுமையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.
நிகழ்ந்த இந்த சம்பவத்திற்கு அரசு உடனடியாக எந்தவித பாதுகாப்புக்கான நடவடிக்கையை எடுக்கவில்லை எனில் பிலிம் சிட்டியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், கலைஞர்களும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்து உள்ளார்.